Categories: Cinema News latest news

நமக்கு எப்பையுமே பழைய வில்லன் தான் செட்டாகுமோ? லோகேஷின் ஸ்கெட்ச் இவருக்கு தான்..! மாஸா இருக்குமே!

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் அடுத்த வருடம் அதிக படங்கள் மீது ரசிகர்கள் கண் வைத்து இருக்கின்றனர். இதில் முக்கியமானது என்னவோ தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 171 திரைப்படம் தான். இதில் இன்னும் சில ஆச்சரிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தினை லைகா ப்ரோடக்‌ஷன் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தினை முடித்துவிட்டு இந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கிறது. லியோ பட வேலைகள் முடிந்த நிலையில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தினை அறிவித்து அதன் முதல் படைப்பாக ஃபைட் க்ளப் படத்தினை ரிலீஸ் செய்து இருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இதையும் படிங்க: நீ பொட்டு வச்ச தங்க குடம்.. ஊருக்கு நீ மகுடம்.. விஜயகாந்த் செய்த சரித்திர சாதனை!

தற்போது ப்ரீயாகி இருக்கும் அவர் தலைவர்171 படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி வருகிறாராம். இதன் வேலைகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு வேலைகள் தொடங்குவாராம். முதல் இந்த படத்தின் ஸ்பெஷலாக லோகேஷ் படத்தில் இருக்கும் ரத்தம், வெட்டு, குத்து என எதுவுமே இல்லையாம். ஆனால் ஆக்‌ஷன் பேக்காக அவர் இதுவரை தொடாத ஒரு கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும், இப்படத்திலும் மல்டி ஸ்டார் நடிகர்கள் இருப்பார்கள் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழில் சில உச்ச நட்சத்திரங்களும் இணையலாம். அப்படி தான் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கசிந்திருந்த நிலையில், அயலான் ஆடியோ லாஞ்சில் அப்படி ஒரு விஷயம் நடப்பது எனக்கு செய்திகளை பார்த்தே தான் தெரியும்.

இதையும் படிங்க: ஐஷு இல்லனா என்ன பூர்ணிமா இருக்குல? காஜு நிக்சன் கை சும்மாவே இருக்காதே… பார்க்கவே கண்கூசுதே..!

அதாவது அவரின் மிகப்பெரிய ஹிட் என்றால் விக்ரம் மற்றும் மாஸ்டர் தான். அதில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை ரஜினிக்கும் வில்லனாகும் முயற்சியில் இருக்கிறாராம். ஏற்கனவே முன்னணி நடிகர்களுக்கு வில்லனான விஜய் சேதுபதி சமீபத்தில் தான் இனி நோ வில்லன் என்று வேறு அறிவித்து இருந்தார். ரஜினிக்கு கேட்டா யாருங்க நோ சொல்லுவா எனவும் கிசுகிசுத்து வருகின்றனர்.

Published by
Akhilan