குட்டிக்கதையை விட இமேஜ் தான் முக்கியம்… கோபம் குறையாத மனைவி சங்கீதா..! விஜயின் நிலைமை திண்டாட்டம் தான்!

Published on: September 27, 2023
---Advertisement---

Leo Audio Launch: விஜயின் லியோ ஆடியோ ரத்து என அறிவிப்பு வந்த நிமிடத்தில் இருந்து புது புது தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து விசாரிக்கும் போது நிகழ்ச்சியை ரத்து செய்ய இன்னமும் சில பெர்சனல் காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் எப்போதுமே பொது நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் மனைவி சங்கீதாவுடன் கலந்து கொள்வது தான் வழக்கம். அப்படி இருவரும் தம்பதியாக கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் தான். 

அங்கு இருவரின் சம்பாஷினைகள் வைரலாக பரப்பட்டு வந்தது. ஆனால் அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சங்கீதாவை காணவில்லை. தொடர்ந்து அட்லீ- ப்ரியா வளைகாப்பு நிகழ்ச்சிக்கு விஜய் மட்டுமே வந்து இருந்தார்.

இதையும் படிங்க: இவனுங்கள வச்சு அரசியல் பண்ணா விளங்கும்! தன் கைய வச்சே கண்ண குத்திக்கிற கதையா மாறிப்போன விஜய்

இதனால் இந்த பிரச்னை கொளுந்துவிட்டு எரிந்தது. நடிகை ஒருவருடன் விஜய் நெருக்கமாக இருப்பதால் சங்கீதா அவருடன் சண்டை போட்டு பிரிந்து லண்டனில் தந்தை வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் அவரை தற்போது பொதுவெளியில் காணமுடிவதில்லை. 

மகனும், மகளும் சங்கீதாவின் பராமரிப்பில் இருப்பதால் விஜயும் அவர்களை தொடர்பு கொள்ளவும் இல்லை எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் தான் சஞ்சய் படத்தின் அறிவிப்பில் விஜய் கலந்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் அரசியல் முழுவீச்சாக இறங்க இருக்கும் விஜய் சில விஷயங்களை யோசித்து வருகிறார்.

அதில் லியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் சங்கீதா கலந்து கொள்ள பல வழிகளில் முயற்சி செய்தும் கூட அவர் கடைசி வரை வரமுடியாது என பிடிவாதமாகவே இருந்து விட்டாராம். அவர் இல்லாமல் கலந்து கொண்டால் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும்.

இதையும் படிங்க: வாய்ப்புக்காக ஏங்கிய விக்ரமா இப்டி? தயாரிப்பாளரிடம் அம்மாவுடன் சென்று சண்டையிட்ட சம்பவம்!

இதனால் தன் மீது தேவையில்லாத பேச்சுக்கள் வரும் என்பதனை மனதில் வைத்தே இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என விஜய் தரப்பு கோரிக்கை வைத்ததால், லலித் இந்த அறிவிப்பை கொடுத்திருப்பதாக கூட ஒரு தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.