மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 4 நாள்களில் உலகளவில் ரூ.50 கோடியை வசூலித்து சாதனை படைத்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், இதுவரை பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்த படத்தில் தான் முதன்முறையாக படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என பல விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
பல முறை படம் நன்றாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்திருக்கிறது. ஆனால் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று விமர்சனம் முதல் முறையாக மாவீரன் படத்திற்கு தான் வந்துள்ளது. இது எனக்கு புதிது என கூறினார். மேலும் ஆரம்ப காலத்தில் பல ஆண்டுகள் மிமிக்கிரி கலைஞனாக இருந்ததால், நான் நடித்தால் வேறு நடிகர்களின் உடல்மொழி போல தான் இருக்கிறது என பலமுறை விமர்சித்துள்ளனர்.

ஒரு முறை என் படத்தின் விமர்சனத்தில், கெட்டப் மட்டும் மாத்தினால் போதாது நடிக்க தெரியனும் என்று கூறியிருந்தனர். இப்போது அதே பத்திரிக்கையின் விமர்சனத்தில் படத்தில் என்னுடைய நடிப்பு நன்றாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி குரல் கொடுத்தது பற்றி பேசியபோது, நான் முதலில் விஜய் சேதுபதியிடம் குரல் கொடுக்க சம்மதமா என்று கேட்குமாறு கூறிவிட்டேன்.

பிறகு இரண்டு நாட்கள் கழித்து, இயக்குநர் மடோன் அஸ்வினிடம் விஜய் சேதுபதி வேண்டாம், வேறு யாரிடமாவது கேட்டு பார்க்கலாம் என்றேன். ஏனென்றால், பலர் எனக்கும் அவருக்கும் போட்டி என சொல்லுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை.
இப்போது இந்த படத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், இனி வேறு படத்தில் ஒன்றாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று நினைத்தேன். அதனால் அப்படி கூறினேன். நான் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் கண்டிப்பாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பேன் என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க- மாமன்னன் எஃபெக்ட்!. கமல் போட்ட கணக்கு!.. மீண்டும் அரசியல் படத்தில் வடிவேலு?!..
