KamalHassan: நடிகர் கமல்ஹாசன் தனக்கும் ஒருமுறை தற்கொலை செய்து கொள்ளலாம் எனத் தோன்றியது என மேடையில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும், அதற்கு அவர் சொன்ன ட்விஸ்ட் பலருக்கும் கண்டிப்பாக ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் கமல்ஹாசன். 1960 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் தோன்றிய கமலை இன்று வரை பலராலும் மறக்கவே முடியவில்லை. அதன்பின்னர், சினிமாவில் அவர் செய்யாத சாதனை இல்லை.
இதையும் படிங்க: விஷால் கொளுத்தி போட்ட வெடி… ஆனா அதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா!..
நடன இயக்குனராக, இயக்குனராக, நடிகராக, பாடகராக சினிமாவில் அவர் செய்யாத வேலையே இல்லை. தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை டெஸ்ட் செய்த பெருமை கமலையே சேரும். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
234வது படமாக மணிரத்னம் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு மேடையில் கமல் பேசிய விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், எனக்கும் 21 வயதில் தற்கொலை எண்ணம் வந்துச்சு. சினிமா வாய்ப்பு கிடைக்கல செத்துடலாம்னு நினைச்சேன். ஆனால் இயற்கை கொடுத்த வாழ்க்கையை ஏன் அழிச்சிக்கணும்.இதையும் படிங்க: சந்திரமுகி பார்ட் 1 வேட்டையனிடம் ஆசி வாங்கிய சந்திரமுகி 2 வேட்டையன்!.. வைரலாகும் புகைப்படங்கள்!..
இந்த வயதில் எதுவும் சரியாக முடிவெடுக்க முடியாது. அதனால் பொறுமையாக இருந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்து இருக்கிறார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் தற்கொலை சினிமாத்துறையையே உலுக்கி இருப்பது என்பதே நிஜம்.
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…