நடிகர் ராஜ்கிரண் ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண் தான். தற்போது முனி, கிரீடம், சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் என்று தொடர்ச்சியாக 3 மெகா ஹிட் படங்களை கொடுத்த ராஜ்கிரண், அந்த மூன்று படங்களையும் அவரே தயாரித்தும் இருந்தார்.
அந்த சமயத்தில் ரஜினிகாந்த்தும் பல ஹிட் படங்களை கொடுத்து சரசரவென முன்னேறிக்கொண்டிருந்தார். அந்த காலத்தில் ஹீரோக்களிலேயே அதிக சம்பளம் வாங்கியது ரஜினிகாந்த் தான். ஒரு படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் ரஜினி. இந்நிலையில் ரஜினிக்கு போட்டியாக தனக்கு ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் சம்பளமாக கொடுத்தால் தான் படத்தில் நடிப்பேன் என்று திட்டவட்டமாக ராஜ்கிரண் கூறிவிட்டார் என்று தயாரிப்பாளர் டி.சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் 3 படங்களை தானே தயாரித்து நடித்து ஹிட் கொடுத்த ராஜ்கிரணிடம் 4வது படத்திற்காக நான் சென்று கேட்டேன். அப்போது அவர் இதுவரை நான் வேறு ஒருவர் தயாரிக்கும் படத்தில் நடித்ததே இல்லை. ரஜினியை விட அதிக சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று நிபந்தனை விதித்தார். அதற்கும் நான் சரி என்று ஒத்துக்கொண்டேன். இதனால் பல நடிகர்கள் என் மீது கோபப்பட்டனர், என்னை விமர்சித்தனர் என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் டி.சிவா. இத்தனை களேபரத்தை தாண்டியும், அதிகமாக செலவு செய்தும் கூட அந்த மாணிக்கம் திரைப்படம் மொத்தமாக சொதப்பிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
அந்த படத்தின் தோல்விக்கு நடிகர் ராஜ்கிரண் தான் காரணம் என்று மறைமுகமாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் டி.சிவா. ராஜ்கிரண், வனிதா ஆகியோரின் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான மாணிக்கம் திரைப்படத்தில் ராஜ்கிரணின் தலையீடு அதிகமாக இருந்ததாகவும், இதனால் படத்தின் கதையே மாறிவிட்டது எனவும் அதோடு அந்த படமும் படுதோல்வி அடைந்துவிட்டது எனவும் தயாரிப்பாளர் டி.சிவா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…