குழந்தையிலிருந்தே பல பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர்- கண்கலங்கிய காதல் பட நடிகை!

by prabhanjani |   ( Updated:2023-07-18 20:48:01  )
kadhal saranya
X

நடிகை சரண்யா நாக் காதல், பேராண்மை, ரெட்ட வாலு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் சமீப காலமாக சமூக வலைதளங்களிலும், பேட்டிகளிலும் தான் அவரை பார்க்க முடிகிறது.

kadhal saranya

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக இவர் பல படங்களில் நடித்துள்ளதாகவும், அப்போதிலிருந்தே இவருக்கு பாலியல் தொல்லைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார் நடிகை சரண்யா நாக்.

மேலும் தான் சினிமா துறையில் இருப்பதாலும், தன்னிடம் பெரிய அளவில் பணம் இல்லாததாலும், தன்னுடன் தாய், தந்தை என யாரும் உடன் இல்லாததால், கேட்ட யாரும் இல்லை என்ற எண்ணத்தினாலும், பல சமயம் ஆண்கள் தன்னிடம் அட்வான்டேஜ் எடுக்கவே முயற்சித்தனர் என்று தெரவித்துள்ளார்.

jayamravi

இதனால் தான் உதவி கேட்கவே பயப்பட்டிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தனியாக வளர்ந்ததால், எப்படி அந்த சூழ்நிலைகளை கையாள்வது என தெரியாமல் இருந்தேன் என்றும் சரண்யா நாக் கூறியுள்ளார்.

சிறு வயதில் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட ஒரு நபரை பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பார்த்ததாக சரண்யா நாக் தெரிவித்துள்ளார். அப்போது அந்த நபர் இவரை பார்த்ததும் பயந்து, பதட்டமாகி, ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

saranyanag

என் மீது எந்த தவறும் இல்லாததால், என்னால் அவரை நேருக்கு நேர் பார்க்க முடிந்தது. ஆனால் அந்த நபரால் அங்கு இருக்கவே முடியவில்லை, பயந்து ஓடிவிட்டார் என சரண்யா தெரவித்துள்ளார். இப்போதெல்லாம் இது போன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதை கற்றுக்கொண்டேன், இனி எந்த பயமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- ஹீரோக்களை தூக்கி சாப்பிட்ட 4 மாஸ் வில்லன்கள்- படத்துல ஹீரோ இருந்த இடமே தெரியாம போய்ட்டாரே…

Next Story