தமிழ் படத்தால் வெட்கப்படவில்லை… எப்போதுமே அதை செய்வேன்… பூஜா ஹெக்டேவின் ஸ்மார்ட் மூவ்!

pooja hedge
Pooja Hedge: தமிழ் சினிமாவில் தற்போது செம பிஸியாகி வரும் பூஜா ஹெக்டே சொல்லி இருக்கும் ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபலமான நடிகை இருப்பவர் பூஜா ஹெக்டே. தற்போது பல புதிய பரிமாணங்களில் தன்னைக் காட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது தன்னுடைய வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள சில முயற்சிகளையும் செய்து வருகிறார்.
இவரின் அடுத்த படம் 'ரெட்ரோ'வில் முதன்முறையாக தமிழில் டப்பிங் செய்துள்ளார். இந்த படம், பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கின்றார்.
தமிழில் டப்பிங் செய்யும் முயற்சி, பூஜாவுக்கு ஒரு புதிய சவாலாக அமையும் என்பதால், அதற்கான கடுமையான பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பூஜா ஹெக்டே, இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் ஒரு வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி வரும் பூஜா தற்போது கோலிவுட்டின் வாண்டட் நடிகையாக மாறி இருக்கிறார். இந்நிலையில் தமிழ் படத்தில் நடந்த அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.
ஒரு தமிழ் படத்தின் ஆடிஷனுக்கு சென்ற பூஜா ஹெக்டேவை நிராகரித்து இருக்கின்றனர். ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கு அவரை விட வயது முதிர்ந்த ஒரு நடிகையை தேர்வு செய்தார்களாம். இதனால் நான் வெட்கபடவில்லை. இப்போதும் ஆடிஷனுக்கு செல்ல தயாராகவே இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.