‘படையப்பா’வில் நீலாம்பரி கேரக்டரால் கடுப்பான ரசிகர்! இவ்ளோ பிரச்சினைகளை சந்தித்தாரா ரம்யா கிருஷ்ணன்
Padaiyappa Movie: படையப்பா திரைப்படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 25 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், ரமேச்ஜ் கண்ணா, செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்தப் படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
அதுவும் பாபா படத்தின் தோல்விக்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த படமாக படையப்பா திரைப்படம் அமைந்தது. அதனால் இந்தப் படத்தை அனைவரும் கொண்டாடி தீர்த்தார்கள். கே.எஸ். ரவிக்குமார் ரஜினி காம்போ என்றாலே அது வெற்றிதான் என்பதை மீண்டும் நிரூபித்த படமாக படையப்பா திரைப்படம் அமைந்தது.
இதையும் படிங்க: அந்த க்ரூப் எடுக்கிறதெல்லாம் படமே இல்லை!.. நாங்க எடுக்கிற படங்கள் தான் மாஸ்.. பா. ரஞ்சித் பேச்சு!..
25 வது வருடத்தை கொண்டாடி வரும் இந்தப் படையப்பா படத்தை பற்றி சமூக வலைதளங்களில் படத்தை பற்றிய பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரம்யா கிருஷ்ணனும் சில சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்திருந்தார். அதாவது ரஜினிக்கு வில்லன் என்றாலே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். அதுவும் நான் வில்லியாக நடித்தேன்.
அவருக்கு இருக்கும் ரசிகர்களை நினைத்து என்னிடம் சில பேர் படம் ரிலீஸாகும் போது சென்னையில் இருக்காதீர்கள் என்று சொல்லி பயமுறுத்தினார்கள். மேலும் வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட சௌந்தர்யா கேரக்டரிலாவது நடித்திருப்பேன். அதனால் அவர்கள் சொன்னபடியே சென்னையில் பட ரிலீஸ் அன்று நான் சென்னையில் இல்லை. ஆனால் தியேட்டரில் திரையை எல்லாம் கிழித்தார்கள் என்று சில தகவல்கள் வெளியானது.
இதையும் படிங்க: இரத்தம் பீறிட்டு வருது! அஜித் முடியவே முடியாதுனுட்டாரு.. பெப்சி விஜயன் சொன்ன சுவாரஸ்ய தகவல்
அதையும் மீறி இந்தப் படத்தில் ஒரு பவர்ஃபுல்லான ரோல் நீலாம்பரி. கதைக்கு மிகவும் முக்கியத்துவமான ரோல். இப்படி இருந்தும் ரஜினி சார் என்னை சுதந்திரமாக நடிக்க வைத்தார். அதற்கு ரஜினி சாருக்கு மிக்க நன்றி என்று கூறினார் ரம்யா கிருஷ்ணன். மேலும் படத்தில் ஒரு சீனில் ரஜினி முன்னாடி ரம்யா கிருஷ்ணன் கால் மேல் கால் போட்டு உட்காரும் சீன் வரும்.
அந்த சீன் வரும் போது திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் ப்ளேடால் தியேட்டர் திரையை கிழித்துவிட்டாராம். இது ரஜினியின் காதுக்கு போக அந்த ரசிகரை விட்டு விடுங்கள், அதற்கான செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறியதாக செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க: விக்னேஷ் சிவன் படம் ஓவரா!.. அடுத்த படத்தில் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன்!.. இயக்குநர் யாரு தெரியுமா?..