வெகு காலங்களாக தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். 1980 களில் தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிகராக அறிமுகமானார். சினிமாவில் அறிமுகமான புதிதில் வில்லனாகதான் நடித்து வந்தார் சரத்குமார். அப்போது அவருக்கு வில்லனாக நடிப்பதற்கே அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தன.
அதன் பிறகு ஹீரோவாக அறிமுகமான சரத்குமார் இதுவரை 140க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரத்குமார்.
இந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே ரஜினி நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். ஒருவேளை இந்த பாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தால் என்னவாகி இருக்கும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் சரத்குமாரிடம் கேட்டனர். அதற்கு சரத்குமார் பதிலளிக்கும்போது ரஜினிகாந்த் நடித்திருந்தால் அவரது புகைப்படம்தான் போஸ்டர்களில் பெரிதாக இருந்திருக்கும் என கூறினார்.
இப்பவும் 25 பேர அடிப்பேன்:
அதன் பிறகு விக்ரம் உங்களை தாத்தா என அழைப்பது போன்ற காட்சி இருக்கிறதே? உண்மையிலேயே விக்ரமிற்கும் உங்களுக்கும் எத்தனை வயது வித்தியாசம் என கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத்குமார், விக்ரமிற்கும் எனக்கும் ஒரு நான்கு அல்லது ஐந்து வயதுதான் வித்தியாசம். அது இல்லாமல் விக்ரம் என்னை தாத்தா என அழைப்பதால் நான் தாத்தாவாக ஆகிவிட மாட்டேன்.
இப்போதும் என்னால் 25 பேரை அடிக்க முடியும். அந்த பலம் எனக்கு இருக்கிறது. படத்திலேயும் கூட எனது கதாபாத்திரத்தை நேருக்கு நேர் நின்று ஜெயிக்க முடியாது. அதை விக்ரமே படத்தில் ஒப்புக்கொண்டதை நீங்கள் பார்த்திருக்கலாம் என கூறினார் சரத்குமார்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…