தெலுங்கு சினிமாவில் தற்போது மிக முக்கிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி இந்தியா முழுக்க மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா.
தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து இருந்த ‘புஷ்பா’ திரைப்படம் கொரோனாவுக்கு பிறகு வெளியான முதல் பான் இந்தியா பிளாக் பஸ்டர் திரைப்படமாக உருவெடுத்தது.
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அல்லு அர்ஜுன் தயாராகி வருகிறார். இதற்கிடையில், மேலே உள்ள புகைப்படத்தை சமீபத்தில் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார். உடனே, நெட்டிசன்கள் இது புஷ்பா இரண்டாம் படத்திற்கான புதிய லுக் என்று ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.
இதையும் படிங்களேன்- நான்தான் புதிய கட்டப்பா.! இத பாத்தா ஒருத்தரும் வாய்ப்பு தரமாட்டாங்களே.? காஜல் செய்த சிறப்பான சம்பவம்.!
ஆனால், இந்த போஸ்டர் ஒரு விளம்பரத்திற்கான அட்டை புகைப்படம் என்று தெரிய வந்தது. தற்போது, இதேபோல் ஒரு விளம்பரத்திற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க அந்நிறுவனம் ஓகே சொல்லிருந்தாலும் இவர் வேண்டாம் என்று மறுத்துள்ளார். அதாவது, குட்கா மற்றும் மதுபான போன்ற விளம்பரத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் தருவதாக கூறியும் இவர் அதில் நடிக்க மறுத்துள்ளாராம்.
இதற்கு இவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இவருக்கு பொதுவாக, விளம்பர படத்திற்கு வாய்ப்புகள் அதிகமாகவே கிடைக்கும் என்றே சொல்லலாம். அதுபோல், ஒரு விளம்பர படத்துக்கு நடிக்க சுமார் ரூ. 7 கோடி வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
விஜய் நடிக்கும்…
தெலுங்கில் பாலையா…
விஜய் அரசியலுக்கு…
நடிகர் விஜய்…