Cinema History
சிங்கிள் ஷாட்ல எடுக்கிறேன்!..ஒரே காட்சியை ஆறு நாள் எடுத்த வெற்றிமாறன்!… எந்த சீன் தெரியுமா?
தமிழ் திரைப்பட துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். சினிமாவிற்கு வந்த காலம் முதலே வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படங்கள் யாவும் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன.
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர் வெற்றிமாறன். அவரிடம் சினிமா கலையை கற்றுக்கொண்ட பிறகு தனியாக படங்களை இயக்க துவங்கினார்.
2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, அசுரன் போன்ற படங்களை இயக்கினார். வெற்றிமாறன் இயக்கிய அதிகப்பட்ச திரைப்படங்களில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்திருப்பார்.
வட சென்னையில் எடுத்த காட்சி:
தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விடுதலை திரைப்படத்தில் முதல் சீனே கிட்டத்தட்ட 10 நிமிடத்திற்கு மேல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே வட சென்னை படத்தில் ஒரு காட்சியை வெற்றிமாறன் எடுத்துள்ளார்.
அதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். வட சென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தை அவரது நண்பர்கள் கொலை செய்யும் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியை சிங்கிள் டேக்கில் எடுப்பதற்காக வெகுவாக கஷ்டப்பட்டுள்ளார் வெற்றிமாறன்.
இதனால் அந்த ஒரு காட்சியை மட்டும் ஆறு நாட்கள் படமாக்கியுள்ளார். அந்த அளவிற்கு திரைப்படங்களை சரியாக எடுக்கும் இயக்குனராக வெற்றிமாறன் இருப்பார்.