உங்களை பற்றிய 'பல' உண்மைகளை கூறிவிடுவேன்.! ரஜினியை மிரட்டிய வில்லன் நடிகர்.!
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போதும் கூச்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரைப்பட வரலாற்றில் செய்த பல வசூல் சாதனைகள் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றி உள்ளது. தற்போது வரை தமிழில் நம்பர் ஒன் நடிகர் என்றால் அது ரஜினிதான் தான் அவரது இடத்தை பிடிக்க தான் மற்ற நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
இவரின் நடிப்பில், கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் ஜெகபதி பாபு இவர் ஒரு பேட்டியில் கூறும்போது, ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் அவரை பல வருடங்களாக எனக்கு தெரியும்.
தற்போதும் குழந்தைத்தனம் மாறாமல் அதே குறும்புடன் இருக்கிறார். அண்ணாத்த படத்தின் சூட்டிங் இடைப்பட்ட நேரத்தில் கீர்த்தி சுரேஷ் இடம் சென்று ஜெகபதிபாபு மிகவும் கெட்டவர் நல்லா இருக்கும் பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என குறும்பாக புகார் கொடுத்துவிட்டு வந்து விடுவாராம்.
இதனை, கீர்த்தி சுரேஷ் ஜெகபதிபாபு இடம் கேட்டு விடுவாராம். ஜெகபதிபாபு ரஜினிகாந்திடம் சென்று நீங்கள் என்னை பற்றி கூறினால் நான் உங்களை பற்றி பல உண்மைகளை கூறி விடுவேன் என குறும்பாக மிரட்டுவார்.
இதையும் படியுங்களேன்-
அண்ணாத்த படத்தின் ரிசல்ட்.! இனி இது வேண்டவே வேண்டாம்.! |
ஆம்.. உடனே ரஜினிகாந்த் குழந்தைத்தனமாக ஐயோ அதெல்லாம் வேண்டாம் என மறுத்து விடுவாராம். இதனை ஜெகபதிபாபு ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்