இனிமே அப்படி நடிக்க மாட்டேன்.. ஏன்னா வயசாயிடுச்சி!.. தனுஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு!..

Published on: July 20, 2023
dhanush
---Advertisement---

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்ததோடு, பாலிவுட், ஹாலிவுட் என வேற லெவலில் கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் கமெர்ஷியல் ஹீரோவாக திருடா திருடி, திருவிளையாடல் ஆரம்பம் என பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்த தனுஷ் மெல்ல மெல்ல ரொமான்டிக் ஹீரோவாக மாறினார்.

dhanush3
dhanush3

3, மரியான் உள்ளிட்ட படங்களின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக மாறிய தனுஷ், அதன் பிறகு அசுரன், கர்ணன் போன்ற வித்யாசமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், தனுஷ் அசால்ட்டாக நடித்து அசத்திவிடுவார். ஆனால் சமீப காலமாக காதல், ரொமான்ஸ் படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில் 40 வயது ஆகிவிட்டது. எனவே, இனி காதல் படங்களில் நடிக்க போவதில்லை என்று தனுஷ் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், ஒரு காலத்தில் பல ஹீரோயின்களோடு கிசுகிசுவில் சிக்கிய இவர், தமிழ் சினிமாவிலும் காதல் மன்னனாக வலம் வந்தார். ஆனால் தற்போது காதல் படமே வேண்டாம் என்கிறார்.

dhanush
dhanush

மரியான் படம் வெளியாகி 10 ஆண்டுகள் அனதையடுத்து, அந்த படக்குழுவினர் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தனர். அந்த படத்தின் இயக்குநர் பரத்லாலா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் தனுஷ், நடிகை பார்வதி உள்ளிட்டோர் இணைந்து லவ்வில் பேசினர். அப்போது இயக்குநர் பரத்லாலா மரியான் போன்ற காதல் படங்களில் தனுஷ் அதிகம் நடிக்க வேண்டும், நான் அதை பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

dhanush

அதற்கு பதிலளித்த தனுஷ், எனக்கு 40 வயது ஆகிவிட்டது. இனி எனக்கு காதல் படமெல்லாம் செட் ஆகாது என சிரித்துக்கொண்டே கூறினார். மேலும் இனி காதல் படங்களில் எல்லாம் அடுத்த தலைமுறை நடிகர்கள் நடிக்கட்டும் என தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மரியான் பட ஷூட்டிங்கில் உங்களை நான் மிகவும் டார்ச்சர் செய்தேன் என்று இயக்குநர் பரத்லாலா கூறினார். அதற்கு இப்போது அந்த டார்ச்சர் எல்லாம் பழகி விட்டது சார். இன்னும் நிறைய டார்ச்சருக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பதிலளித்தார் தனுஷ். 

இதையும் படிங்க-மாவீரனில் விஜய் சேதுபதி வேண்டாம் என நான்தான் சொன்னேன்- மேடையில் உளறிய சிவகார்த்திகேயன்!..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.