விஜயகாந்தை ஸ்டார் ஆக்க இப்ராஹிம் ராவுத்தர் பட்டபாடு!.. மனுஷன் என்னமா யோசிச்சிருக்காரு!…
நடிகர் விஜயகாந்தும், இப்ராகிம் ராவுத்தரும் சிறுவயது முதலே நண்பர்கள். இருவரும் ஒன்றாக மதுரையிலிருந்து சென்னை வந்தவர்கள். ராவுத்தர் கதாசிரியராகவும், விஜயகாந்த நடிகராகவும் முயற்சி செய்தனர். விஜயகாந்த் மெல்ல மெல்ல வாய்ப்புகள் கிடைத்து நடிக்க துவங்கியதும் அவர் நடிக்கும் படங்களை முடிவு செய்யும் நபராக ராவுத்தர் மாறினார்.
அவர்தான் கதையை கேட்டு அது விஜயகாந்துக்கு ஏற்ற படமா என முடிவு செய்வார். அவரின் பேச்சை விஜயகாந்த் தட்டவே மட்டார். அப்படித்தான் பல ஹிட் படங்களை கொடுத்தார் விஜயகாந்த். வில்லனாக நடித்த விஜயகாந்தை ஹீரோவாகவும், அதன்பின் அவரை ஆக்ஷன் கதைகளில் நடிக்க வைத்து அவரின் இமேஜை மாற்றியதில் பெரிய பங்கு ராவுத்தருக்கு உண்டு.
விஜயகாந்த் வளர்ந்துகொண்டிருந்த நேரத்தில் வெளிவந்த திரைப்படம்தான் ஊமை விழிகள். இந்த படத்தில் நடிக்க விஜயகாந்துக்கு விருப்பமில்லை. ஏனெனில், ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அப்படத்தை உருவாக்கினர். ஆனால், அவர்கள் எடுத்த சில காட்சிகளை பார்த்த ராவுத்தர் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என முடிவு செய்தார். மேலும், அந்த படத்தில் விஜயகாந்துக்கு இருந்த சின்ன வேடத்தை படம் முழுவதும் வருவது போல் மாற்றினார். ஒரு வாரம் மட்டுமே விஜயகாந்த் நடிப்பதாக இருந்த அந்த படத்தில் 60 நாட்கள் நடித்தார் விஜயகாந்த். இந்த படம் விஜயகாந்தின் இமேஜை மாற்றியது. ஆனாலும், அப்போதும் விஜயகாந்த் பெரிய ஸ்டாராக மாறவில்லை.
எனவே, அதே டீமை வைத்து உழவன் மகன் படத்தை இப்ராகிம் ராவுத்தர் தயாரித்தார். இந்த படம் வெளிவந்த பின் விஜயகாந்த் ரஜினி, கமலுக்கு இணையாக பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என கணக்குப்போட்டார் ராவுத்தார். எனவே, அப்போது விஜயகாந்த படங்களுக்கு என்ன பட்ஜெட் ஒதுக்குவார்களோ அதைவிட 10 மடங்கு செலவு செய்து அப்படத்தை பெரிய படமாக எடுத்தார். அந்த படத்தில் ஒரு மாட்டு வண்டி ரேஸ் காட்சி வரும். அதை மட்டுமே ஒரு மாதம் எடுத்தார். அதற்காக படப்பிடிப்பு குழு படாத பாடு பட்டது. தற்போதுவரை அதுபோன்ற ஒரு மாட்டு வண்டி ரேஸ் காட்சியை யாராலும் எடுக்கமுடியவில்லை. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் நான் பணம் கொடுக்கிறேன் என இயக்குனரிடம் சொன்னார் ராவுத்தர்.
அப்படி உருவான உழவன் மகன் திரைப்படம் அவர் ஆசைப்பட்டது போலவே பெரிய வெற்றியை பெற்று விஜயகாந்தை பெரிய ஸ்டாராக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியும்!.. சரி செய்ய முடியாது!.. இயக்குனர் அதிர்ச்சி பேட்டி!…