அதே டெய்லர், அதே வாடகை...கதையை காபியடிச்சு தயாரிப்பாளரை காலி செய்த மணி சார்!..
தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். கமல் ரஜினி போன்ற பெரும் நடிகர்களில் துவங்கி கௌதம் கார்த்திக் போன்ற சின்ன நடிகர்கள் வரை பலரையும் வைத்து படங்களை இயக்கியுள்ளார் மணிரத்தினம். அவர் இயக்கிய திரைப்படங்களில் அஞ்சலி, நாயகன், மௌனராகம், தளபதி போன்ற திரைப்படங்கள் பிரபலமாக பேசப்படும் படங்கள் ஆகும்
தற்சமயம் அவர் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து நடிகர் கமல்ஹாசனை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் மணிரத்தினம்.
ஆரம்ப காலகட்டங்களில் திரையுலகில் சில தவறுகளை செய்துள்ளார் மணிரத்தினம். முக்கியமாக நாயகன் திரைப்படம் எடுக்கும்பொழுது அதன் மூலமாக தயாரிப்பாளருக்கு பெறும் நஷ்டத்தை உருவாக்கி இருந்தாஎ மணிரத்தினம். இதை அந்த தயாரிப்பாளரின் மகனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அதேபோல மௌன ராகம் திரைப்படத்தை இயக்கும் பொழுதும் ஒரு சம்பவத்தை செய்துள்ளார் மணிரத்தினம் மௌனராகம் திரைப்படத்தில் கார்த்திக், ரேவதி இருவரும் முக்கிய கதாபாத்திரமாக நடித்தனர்.
முன்பே வெளியிட்ட மணிரத்தினம்:
ஆனால் அதற்கு முன்பே இயக்குனர் ராஜேஸ்வர் தனது இயக்கத்தில் இதய தாமரை என்கிற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படத்திலும் நடிகர் கார்த்திக்கும் ரேவதியும் ஜோடியாக நடித்திருந்தனர்.
ஆனால் இந்த திரைப்படத்தை எடுத்த பிறகு சில காரணங்களால் அதை வெளியிடுவது தாமதமாகிவிட்டது. கிட்டத்தட்ட அதே கதையை அடிப்படையாகக் கொண்டுதான் மௌனராகம் திரைப்படமும் எடுக்கப்பட்டது. மௌனராகம் திரைப்படம் இதய தாமரை திரைப்படத்திற்கு முன்பே வெளியானது. பெரும் வெற்றியையும் கொடுத்தது.
ஆனால் மெளனராகத்திற்கு முன்பே எடுக்கப்பட்டாலும் அதற்கு பிறகுதான் இதய தாமரை திரைப்படம் வெளியானது. இதய தாமரை திரைப்படம் மௌனராகம் படத்தின் கதையை ஒத்திருந்ததால் அந்த திரைப்படம் ஓடவில்லை. இந்த விஷயத்தை அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.