டி.ராஜேந்தருக்கு உதவிய பிரபல காமெடி நடிகர்… நன்றி கடனாக என்ன செய்தார் தெரியுமா?

அடுக்குமொழி வசனங்களுக்கு புகழ்பெற்ற டி.ராஜேந்தர் மயிலாடுதுறை பகுதியில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரி காலங்களிலேயே சொந்தமாக பாடல்களை எழுதி பாடுவது, அடுக்குமொழி வசனங்களை பேசுவது போன்ற திறமைகளை பெற்றவர். இதுதான் பின்னாளில் இயக்குனர், இசையமைப்பாளர். ஒளிப்பதிவாளர் என பன்முக கலைஞராக அவரை ஆக்கியிருக்கிறது.

டி.ராஜேந்தர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது அவரிடம் சுத்தமாக பணமே இல்லை. அவரிடம் நம்பிக்கை மட்டுமே இருந்தது. அந்த சமயத்தில் ஒரு உதவி இயக்குனர் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தாராம். அதாவது டி.ராஜேந்தரை தனது அறையில் தங்குவதற்கு அனுமதி தந்திருக்கிறார். அதுவும் எப்படி என்றால், பகலில் தங்கவைத்தால் டி.ஆருக்கு தனியாக வாடகை கொடுக்க வேண்டும் என்பதால் இரவு 10 மணிக்கு மேல் வந்து தூங்கிவிட்டு விடிவதற்குள் சென்றுவிட வேண்டும் என கூறியிருக்கிறார். அதே போல் அவரது அறைக்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் குளித்துவிட்டு அங்கேயே சாப்பிட்டுக்கொள்ளும்படியும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு தனது கஷ்ட காலகட்டத்தில் உதவிய அந்த உதவிய இயக்குனரை டி.ஆர் பின்னாளில் தனது பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்கி தனது நன்றியை காட்டியிருக்கிறார். அந்த உதவி இயக்குனர் யார் தெரியுமா? அவர்தான் இடிச்சபுலி செல்வராஜ். இவர் காமெடி வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல காமெடி நடிகரான பாண்டு, இடிச்சபுலி செல்வராஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it