ஏப்ரல் 10 ரேஸிலிருந்து விலகிய இட்லி கடை!.. குட் பேட் அக்லிதான் காரணமா?!....

by சிவா |
idli kadai
X

#image_title

Idli kadai: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் அதன்பின் படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டார். சிறந்த நடிகராக பார்க்கப்படும் தனுஷ் ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும், ஒரு பக்கம் சிறந்த நடிப்புக்கு வாய்ப்புள்ள நல்ல கதைகளிலும் நடித்து வருகிறார்.

புதுப்பேட்டை, மயக்கம் என்ன, பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் என பல படங்களிலும் அப்படி நடித்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வாங்கியிருக்கிறார். அண்ணன் செல்வராகவனுடன் சில படங்களில் வேலை செய்ததில் சினிமா உருவாக்கத்தை நன்றாகவே கற்றுக்கொண்டார்.

idli kadai

idli kadai

இதன் விளைவுதான் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பின் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பின் இட்லி கடை என்கிற படத்தையும் இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். ராயன் படத்திற்கு முன்பே அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

இட்லி கடை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும், ராஜ்கிரண் இப்படத்தில் தனுஷின் தாத்தாவாக நடித்திருக்கிறார். அதோடு, அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

idli kadai

#image_title

இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே தேதியில்தான் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளியாகிறது. எனவே, அப்போது வெளியானால் இட்லி கடை படம் கல்லா கட்டுமா என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில், இப்போது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளி போய்விட்டது.

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஷ்கரன் ‘இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 சதவீதம் மீதமிருக்கிறது. நித்யா மேனன், அருண் வ்விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் ஆகிய எல்லா நடிகர்களும் ஒரே காட்சியில் நடிக்க வேண்டும் என்பதால் அவரகளின் நேரங்களை ஒருங்கிணைத்து அந்த காட்சியை எடுக்க வேண்டும். படம் நன்றாக வந்திருப்பதால் அவசரப்படாமல் சிறப்பாக முடிக்க விரும்புகிறோம். புதிய ரிலீஸ் தேதியை இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிப்போம்’ என விளக்கமளித்திருக்கிறார்.

Next Story