Dhanush: தமிழ் சினிமாவில் தற்போது தனுஷ் தொடர்ச்சியாக நடிப்பு ஒரு பக்கம், இயக்கம் ஒரு பக்கம் என தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். இதனாலே அவருடைய மார்க்கெட்டும் எக்கசக்கமாக உச்சத்தில் எகிறி வருகிறது. இதில் தற்போதைய அப்டேட் தான் பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் பிஸியாக இருந்து வந்தார். ஆனால் சமீபத்திய வருடங்களாக அவர் ஒரே நேரத்தில் டைரக்ஷனில் ஆர்வம் காட்டி தொடர்ச்சியாக படத்தினையும் இயக்கி வருகிறார். அந்த வகையில் அவரின் ராயன் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதை தொடர்ந்து புதுமுக நடிகர்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தினை இயக்கி இருந்தார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை குவித்த நிலையில் வசூலும் பெரிய அளவில் அடி வாங்கியது.

இதையடுத்து தற்போது தனுஷின் இயக்கத்தில் அடுத்து இட்லி கடை படத்தினை இயக்கி வருகிறார். அருண் விஜய், நித்யா மேனன், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் படப்பிடிப்பு பெரிய அளவில் முடிந்துவிட்டது. படத்தின் கடைசிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது தள்ளிப்போய் இருக்கிறது. தனுஷின் இயக்கத்தில் அவர் அடுத்து அஜித்குமார் இயக்கத்தில் ஒரு படத்தினை இயக்க இருப்பதால் அவருடைய குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக இருக்க கூடாது என்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் ஓடிடி உரிமை தொகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 45 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு இப்படம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்திய காலமாக ஓடிடி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கே சரியாக விலை நிர்ணியிக்காமல் போக்கு காட்டி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படமே இன்னமும் ஓடிடி விற்பனை ஆகாமல் இருக்கிறது. ஆனால் தனுஷை இன்னமும் மார்க்கெட்டில் கில்லியாக தான் பார்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.