Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பின்னர் நிறைய ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் விஜயகாந்த் தான். அது அவரின் குணத்துக்காக என்பது தான் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. குணம் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் அவர் கெட்டி தான். அவரின் ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்ய சம்பவம் குறித்து மீசை ராஜேந்திரன் ஆச்சரிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, கேப்டன் எப்போதுமே சண்டை காட்சிகளுக்கு பயந்தது இல்லை. டூப் போடலாம் என்று கேட்டால் கூட அவங்களும் மனுஷங்க தானே என்பார். ஒரு படத்தில் முன்னாடி இரண்டு பைட்டர்கள் இருப்பார்கள் அவர்களை குதிரையில் இருந்து ஜம்ப் செய்து போய் மிதிக்கணும்.
இதையும் படிங்க: படுத்தே விட்ட ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாக்ஸ் ஆபிஸ்!.. பொங்கலுக்கும் இதே நிலைமை தானா?..
ராக்கி ராஜேஷ் மாஸ்டர் சொல்லியும் கேட்காமல் அவரே அந்த காட்சியில் நடித்தார். ஆனால் இதில் இன்னொரு சிக்கல் அவர்கள் நின்ற ஐந்து அடிக்கு அருகில் பள்ளம் இருந்தது. உயிர் போகாது இருந்தாலும் கை, கால்களுக்கு அடிப்படும்.
ஆனால் அந்த காட்சியில் குதிரையில் வந்து அந்த பைட்டர்களை மிதித்து காட்சியை ஓகே செய்து விட்டு அவர்கள் தவறி பள்ளத்தில் விழுக போக அவர்களையும் சரியாக காப்பாற்றினார். அதுப்போல வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஒருமுறை என்னை பார்க்கும் போது கேப்டன் விஜயகாந்த் நல்லா இருந்தா நாங்க இப்படி கஷ்டப்பட வேண்டாம் என்றார்.
அப்போது அவர்களுக்கு இருந்த ஒரு காட்சியை கூட சொல்லி சிலாகித்தார். ஹான்ஸ்ட் ராஜ் படத்தின் சண்டைக்காட்சியில் கேப்டனை மிதிக்கணும். கேப்டனும் செய் என்றார். பொன்னம்பலுமும் தைரியமாக அதை ஓங்கி மிதித்து விட்டார். ஆனால் கேப்டன் பத்தடி தள்ளிப்போய் விழுந்தார். எழுந்திருக்கவே இல்லையாம்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க போறான்னு ஒப்பாரி வச்ச ரஜினி… நடிகவேள் பட்டத்தை ஏன் தூக்கி கொடுக்கிறாரு?
நெஞ்சு பகுதியில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அப்போ பொன்னம்பலத்தினை எல்லாரும் திட்டத் தொடங்கிவிட்டனராம். ஆனால் கேப்டன் நான் தான் செய்ய சொன்னேன் என்றாராம். இருந்தும் அவரை மருத்துவமனையில் படக்குழு அனுமதித்தது.
பொன்னம்பலத்துக்கு சற்று நேரத்தில் வலியுடன் கேப்டன் விஜயகாந்தே கால் செய்கிறார். ரூமை விட்டு வெளியில் வந்துவிடாதே உன் மேல எல்லாரும் கோபமா இருக்காங்க. உன் ரூமுக்கே எல்லாமும் வந்துவிடும் என பத்திரப்படுத்துவதில் தான் குறியாக இருந்ததாக பொன்னம்பலம் சொல்லி இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.