Connect with us

அத பத்தி பேசுனா அவர் உயிருக்கே ஆபத்து! வடிவேலுவை பற்றி பொங்கி எழுந்த சிங்கமுத்து

latest news

அத பத்தி பேசுனா அவர் உயிருக்கே ஆபத்து! வடிவேலுவை பற்றி பொங்கி எழுந்த சிங்கமுத்து

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்ற பட்டப்பெயருடன் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. ஆரம்பகாலத்தில் தெருவோரங்களில் ஆடிக் கொண்டிருந்தும் பாடிக் கொண்டிருந்தும் பொழப்பை பார்த்துக் கொண்டிருந்த வடிவேலு ஒரு திருமணத்தில் நடிகர் ராஜ்கிரணை சந்தித்திருக்கிறார்.

வடிவேலுவின் தோற்றம், திறமை இவை எல்லாவற்றையும் பார்த்த ராஜ்கிரண்தான் வடிவேலுவை முதன் முதலில் சினிமாவில் நடிக்க வைக்க உதவியிருக்கிறார். கவுண்டமணி செந்தில் இவர்கள் இருக்கும் படங்களில் ஒரு துணை நகைச்சுவை நடிகராக தோன்றினார் வடிவேலு.

இதையும் படிங்க: மவனே எவன் ஜெயிச்சாலும் இத பண்ணுவேன்டா! சொன்னதை செய்து காட்டிய விஷ்ணு – இது வேற லெவல்

அதன் பிறகு படிபடியாக வளர்ந்து ஒரு திறமையான நடிகராக உயர்ந்தார். தேவர் மகன், கிழக்குச் சீமையிலே, முதல் மரியாதை போன்ற படங்கள் வடிவேலுவின் திறமையை நிரூபித்த படங்களாக இருந்தன. அதன் பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுடன் பயணித்து ஒரு  முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

வசதி பெருக பெருக ஒருவரின் நடத்தை, பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் வரும் என்று சொல்வார்கள். அதே போல் வடிவேலுவிடமும் அதே மாதிரியான ஒரு  மாற்றம் காணப்பட்டது. கூட நடிக்கும் சக நடிகர்களை மதிக்காமல், அவர்களுக்கு துரோகம் செய்ததாகவும் அந்த நடிகர்களே பல பேட்டிகளில் வடிவேலுவை பற்றி கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் டிராப் ஆகிறதா?!.. என்னப்பா சொல்றீங்க?!.. நடப்பது என்ன?..

இந்த நிலையில் சிங்க முத்துவுக்கும் வடிவேலுவுக்கு ஒரு இடத்தகராறு பிரச்சினை பல  நாள்களாக இருந்து வருகின்றன. சமீபத்தில் பேட்டியளித்த சிங்க முத்து ‘என்னாலதான் அவரு கோடிகளில் புரளுகிறார். வெறும் 1.75 கோடியில் வாங்கிய சொத்து இப்போது 500 கோடி வரை போகும். அதெல்லாம் யாரால? என்னாலதான். இன்னும் அவரை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் அப்படி சொன்னால் அது அவரின் உயிருக்கே ஆபத்து’ என சிங்க முத்துகூறினார்.

To Top