நான் எவளோ காசு வேணும்னாலும் தரேன் எனக்கு ஒரு கதை எழுதி கொடுங்கள்.! சுதா கெஞ்சல்.!
பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் தான் ஒரு கதை எழுத வேண்டுமானால் மூன்று மாதத்திற்குள் எழுதி முடித்து விடுவேன் எனக் கூறியுள்ளார். ஏன் என்றால் 3 மாதத்திற்கு மேல் அந்த கதையை எழுதுவதற்கு அவருக்கு ஆர்வம் இருக்காதாம். இதனை இயக்குனர்கள் கலந்துகொண்ட பேட்டியில் கூறினார்.
மூன்று மாதத்திற்குள் அந்த கதை எவ்வளவு எழுத முடிகிறதோ அவ்வளவு மட்டும் எழுதிவிட்டு முடித்து விடுவாராம். இதனை கேட்ட சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் நெல்சன் திலீப்குமாரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அதாவது மூன்று மாதத்தில் ஒரு கதையை எழுதி விடுவதாக கூறிய நெல்சனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் காசு தருகிறேன். எனக்கும் ஒரு கதை எழுதி தாருங்கள். ஏனென்றால் நான் ஒரு கதை எழுதுவதற்கே எனக்கு மூன்று வருடங்கள் வரை ஆகிறது. எனக்கு எழுதுவது சுத்தமாக பிடிக்காது. என சுதா கூறவே,
அதற்கு பதிலளித்த நெல்சன், 3 மாதத்திற்குள் முடித்துவிடுவேன் ஆனால் அந்த 3 மாதம் எப்போது வரும் என தெரியாது. என தனது பாணியில் ரீப்ளே கொடுத்துவிட்டார்.