Categories: Cinema News latest news

என்னய்யா சொல்றீங்க?.. ‘குற்றப்பரம்பரை’ யில் கமலா?..இதெல்லாம் நடக்குற காரியமா?.. நாசுக்கா விலகிய இயக்குனர்!..

விக்ரம் படத்தின் வெற்றி என்னவோ கமலை மிகவும் பிரபலமாக்கிவிட்டது. அதற்கு லோகேஷும் ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார். இப்ப உள்ள தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் ஒரு படத்தை எடுத்து லட்டு போல கொடுத்தார் லோகேஷ்.

kamal

விக்ரம் படத்தின் வெற்றியை நம் வெற்றி என்ற அளவுக்கு அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். விக்ரம் படத்திற்கு பிறகு தூசு தட்டி எடுத்திருக்கின்றனர் இந்தியன் – 2 படத்தை. அந்த படத்தை தான் இப்பொழுது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Also Read

இதையும் படிங்க : இயக்குனர் இமயத்தையே அசிங்கப்படுத்திய முன்னணி நடிகர்… ஆனா இயக்குனரின் பதில் என்ன தெரியுமா?

குற்றப்பரம்பரை

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டிலேயே நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் நாவலான குற்றம்பரம்பரை யை படமாக்க பல இயக்குனர்கள் போராடி வருகின்றனர். பாரதிராஜா முதலில் ஆசைப்பட்டு அதன் பின் இயக்குனர் பாலா கைக்கு மாறியது.

vela ramamoorthy

பாலா இந்த நாவலை படித்து பிடித்துப் போக கமலை நடிக்க வைக்கலாம் என்று யோசனையில் கமலிடம் கதை சொல்ல வேல ராமமூர்த்தியையே அனுப்பியிருக்கிறார். வேல ராமமூர்த்தியும் கமலிடம் கதை சொன்னதில் கமலுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாம்.

கமலின் குறுக்கீடு

உடனே கமலும் சரி என்று சொல்ல பாலாவுக்கு ஒரு சின்ன சருக்கல். என்னவெனில் இந்த மனுஷன வைச்சு படம் எடுத்தால் எடிட்டிங்கில் இருந்து எல்லா வேலைகளில் மூக்கை நுழைப்பார் என கருதி படம் எடுப்பதில் தாமதம் பண்ணியிருக்கிறார். அந்த நேரத்தில் நாச்சியார் படப்பிடிப்பில் பிஸியாக பாலா இருக்க அந்தக் கதை அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

kutraparambarai

இதனையடுத்து குற்றம்பரம்பரை நாவலை படமாக்க இயக்குனர் சசிகுமார் தயாராக இருப்பதாக தெரிந்த நிலையில் ஆனால் அதை ஒரு வெப்சீரிஸாக எடுக்க போகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு வேல ராமமூர்த்தியும் சம்மதம் தெரிவிக்க அதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

sasikumar

Published by
Rohini