Categories: latest news

அவர் Use பண்ணிட்டு தான் என்கிட்ட கொடுப்பார்.! அஜித்திற்கு இப்படி ஒரு பழக்கமா.?!

அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் அடுத்த வாரம் வியாழன் அன்று திரைக்கு வரவுள்ளது. அந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். பல திரையரங்குகளில் புக்கிங் தொடங்கிய்விட்டது.

இப்படம் அஜித்திற்கு பிடித்தமாதிரி பைக் ரேஸிங் கதைக்களத்தை கொண்டு பரபர ஆக்சன் கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது படத்தின் ட்ரைலரில் இருந்தே தெரிகிறது.

இப்படத்தில் வில்லனாக தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா நடித்துள்ள்ளார். அஜித் பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் என்பதற்காக கார்த்திகேயா அடுத்தடுத்து பல்வேறு சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

இதையும் படியுங்களேன் – விரல் வித்தை சிம்பு என்றால்.! வில் வித்தை தனுஷ்டா.! இது எங்க போய் முடிய போகுதோ.?!

இவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், அஜித் சாருக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம். அவருக்கு பைக் பற்றி எல்லாமே தெரியும். நான் இதற்கு முன்னர் பார்க்காத பைக்குகள் நிறைய வந்திறங்கின. எனக்கு அந்த பைக்குகளை பார்த்தவுடனே பயம் தான்.

ஆனால், அஜித் சார் பைக் சத்தத்தை வைத்தே அதில் ஏதேனும் குறை இருக்கிறதா என பார்த்துவிடுவார். அதே போல, புது பைக் வந்துவிட்டால் அதனை முதலில் use செய்து அந்த வண்டி கண்டிஷன் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் மற்றவர்களிடம் கொடுப்பார். பாதுகாப்பு அவருக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார் என தெரிவித்து இருந்தார்.

Published by
Manikandan