ஐய்யோ பார்த்தா மிஸ் பண்ணிட்டோமே? ஏகே-62வில் சம்பவம் பண்ண காத்திருந்த விக்கி - சந்தானம் சொன்ன சீக்ரெட்
வடிவேலு, விவேக் இவர்களுக்கு பிறகு நகைச்சுவையில் ஒரு பிரபலமான நடிகராக வந்தவர் நடிகர் சந்தானம். சின்னத்திரையில் பல படங்களை ரீமேக் செய்து நடித்து வந்தவரை அலேக்கா தூக்கிட்டு வந்து வெள்ளித்திரையில் காட்டியவர் நடிகர் சிம்பு. அவரால் தான் சந்தானம் படங்களில் நடிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஏதோ தன்னிடம் இருக்கும் நகைச்சுவையை வைத்து காமெடி செய்து வந்த சந்தானம் போகப் போக ஒரு முன்னனி நடிகரை போல விரும்பப்படும் நடிகராகவே மாறினார்.
அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களிலும் சந்தானம் தெரிய ஆரம்பித்தார். இவரின் நகைச்சுவைக்கு தீனி போட்ட படங்களாக ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், கலகலப்பு போன்ற படங்களை கூறலாம். முன்னனி நடிகர்கள் நடித்திருந்தாலும் அவர்களுடன் முழு நேரம் பயணம் செய்து படங்களை ரசிக்க வைத்தார் சந்தானம்.
இதையும் படிங்க : இமயமலையை விட்டுட்டு தனியா மாலத்தீவுக்கு ரஜினிகாந்த் போன ரகசியம் என்ன?.. புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!
இப்படியே தன்னுடைய கெரியரை கொண்டு போயிருக்கலாம். ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என்ற ஆசையில் சமீபகாலமாக ஹீரோவாகவே நடித்து வருகிறார். ஆனால் மக்கள் என்னமோ காமெடி நடிகர் சந்தானத்தை தான் விரும்புகிறார்கள். அவர் நடித்த ஒரு சில படங்களை தவிர ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்களை மண்ணைத்தான் கவ்வியது.
மேலும் ஆக்ஷன், டூயட் என கலக்கி வந்தாலும் மக்கள் அதை ரசிக்க வில்லை. அதனால் இனிமேல் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்த படங்களாகவே எடுத்து நடிக்க இருப்பதாக சந்தானம் கூறியுள்ளார். இந்த நிலையில் ஏகே 62 படத்தை பற்றியும் கூறினார் சந்தானம்.
அஜித்தை வைத்து முதலில் விக்னேஷ் சிவன் தான் படத்தை இயக்குவதாக தெரிந்தது. அதில் சந்தானத்திற்கும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதைப் பற்றி அப்பொழுது எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அதை பற்றி இப்போது சந்தானம் வாய்திறந்துள்ளார். அந்தப் படத்தில் தான் நடிக்க இருந்தேன் என்றும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் என்றும் கூறியிருந்தார்.
ஒரு சீரியஸான மனுஷன் அவனுக்கே தெரியாம ஃபன் பண்ணிட்டிருப்பான். அப்படி பட்ட கதாபாத்திரம்தான் என்னுடையதாக இருந்தது. அந்த நேரத்தில் அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து இந்த தகவலை சொல்லலாம் என இருந்தோம். ஆனால் அதற்குள் அந்தப் படம் எப்படியோ போய்விட்டது. அந்தப் படம் மட்டும் வெளியே வந்திருந்தால் வேற லெவல்ல இருந்திருக்கும். இருந்தாலும் அந்த கதாபாத்திரம் அப்படியேதான் இருக்கின்றது. வேறொரு பரிணாமத்தில் பார்ப்போம் என்று சந்தானம் முதன் முறையாக இதை பற்றி பேசினார்.
இதையும் படிங்க : அப்பா சொன்னதுக்காக மோகன்லாலையே அவமானப்படுத்துவதா? விஜய் செஞ்ச காரியத்தால் கடுப்பான நடிகர்