என்னோட யுனிவெர்ஸ இனிமேதான் பாக்க போறீங்க! கௌதம் மேனன் கொடுத்த சூப்பரான அப்டேட்

by Rohini |
vikram
X

vikram

Gautham Menon: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். ஒரு இயக்குனராக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இவர் இப்போது நடிகராகவும் மக்கள் மனங்களை கவர்ந்தவராகவும் மாறிவிட்டார்.

ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் ஒரு சில படங்களை இயக்குவதிலும் மும்முரமாக இருந்து வருகிறார். விஜய் நடிப்பில் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் லியோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கௌதம்.

இதையும் படிங்க: நான் வந்தா அது மரியாதையா இருக்காது..! கண்ணதாசன் ஊர்வலத்தில் கடுப்பான எம்.ஜி.ஆர்..

இந்த நிலையில் இவரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா,சிம்ரன் ஆகியோர் நடிக்க ஹரீஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

2017 ஆம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட இந்தப் படம் சில பல பிரச்சினைகளால் வெளியிடாமலேயே இருந்தது. ஆனால் அந்தப் படத்தின் டீஸர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இதையும் படிங்க: ராஜ்கிரண் அந்த விஷயத்துல என்ன அழவச்சார்!.. சீக்ரெட்டை பகிர்ந்த ‘பூவே உனக்காக’ பட நடிகை…

இந்த நிலையில் இந்தப் படம் நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் என்று படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் கௌதம் மேனன் சமீபத்தில் துருவ நட்சத்திரம் படத்தை பற்றிய ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

அதாவது துருவ நட்சத்திரம் படத்தை விக்ரம் பார்த்து விட்டதாகவும் படத்தை பார்த்து அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினாராம். மேலும் படத்திற்கான டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்டதாக கூறினார்.

இதையும் படிங்க: எப்ப பாத்தாலும் ‘லியோ’ பத்தியே பேசுறீங்களே! சத்தமில்லாமல் ரோலக்ஸ் செய்ற காரியத்தை பார்த்தீங்களா?

அதுமட்டுமில்லாமல் துருவ நட்சத்திரம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறியிருந்தார். ஒரு வேளை இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெறுமானால் கண்டிப்பாக என்னுடைய யுனிவெர்ஸை உருவாக்க இதிலிருந்து தயாராகிவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

Next Story