சமீபத்தில் தான் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இதனை அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார் ரஜினிகாந்த். 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அதுவும் ஜெயிலர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது.
ஏனெனில் அதற்கு முன்பு விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை கொடுத்த நெல்சன் அந்த படம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. அதனால் ரஜினியை வைத்து அவர் எடுக்கும் படம் என்பதால் ஜெயிலர் படத்தின் மீது அந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் யாரும் நினைக்காத அளவு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அது மட்டுமல்ல 700 கோடி வசூலையும் இந்த படம் அடைந்தது.
இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன்லால் ,சிவராஜ் குமார் என மற்ற மொழியில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் நடித்திருந்தனர். அதனால் எல்லா மொழிகளிலும் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றி ஒரு ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இதில் சிவராஜ் குமார் அவருடைய மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் இணைவார் என சொல்லப்பட்டது. யோகி பாபுவும் இந்த படத்தில் இருக்கிறார். மோகன் லால் இந்த படத்தில் இருப்பாரா இல்லையா என்பது பற்றி ஒரு சந்தேகம் இருந்தது .அதுவும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ஜெயிலர் 2வில் என்னை கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் .

தற்போது அவர் நடிப்பில் எம்புரான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்த படத்தின் பிரமோஷனுக்காக பல ஊர்களுக்கும் சென்று வருகிறார் மோகன் லால். இதில் சென்னை வந்தபோது தமிழிலேயே பட வாய்ப்புகள் நிறைய வந்தன. ஆனால் அந்த நேரத்தில் எம்புரான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததனால் என்னால் நடிக்க முடியவில்லை. ஜெயிலர் 2வில் என்னை கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பேன் எனக் கூறி இருக்கிறார் மோகன்லால்.