முதல் நாளே தடைப்பட இருந்த வாலி திரைப்படம்!..விபரீத முடிவை எடுத்த எஸ்.ஜே.சூர்யா!..
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகராவதும் நடிகர்கள் இயக்குனராவதும் மாறி மாறி நடக்கின்ற ஒரு செயல் தான். அப்படி சினிமாவிற்கு நுழையும் போதே நடிகராக வேண்டும் என்ற பேராசையில் வந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா.
ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே.சூர்யா முதன் முதலில் இயக்கிய படம் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படம். பல பேர் உதவியோடு ஆரம்பிக்கப் பட்ட வாலி திரைப்படம் இவரின் கனவாக இருந்தது. கொஞ்சம் விட்டுருந்தால் வாலி பட படப்பிடிப்பு நடக்காமலேயே போயிருக்கும்.
இதையும் படிங்க : விஷாலுக்கு தொடரும் பிரச்சினைகள்!..கண்டுபிடித்த ஜோசியர்!..அவர் செய்ய சொன்ன பரிகாரம் தான் ஹைலைட்!..
முதல் நாள் சூட்டிங் அடையார் கிளப் வீட்டில் நடக்க இருந்தது. சூட்டிங்கிற்கு முந்தைய நாள் அந்த வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விடமுடியாது. உறவுக்காரர்கள் வருகிறார்கள் அதனால் எனக்கு வீடு தேவைப்படுகிறது. வேண்டும் என்றால் சூட்டிங்கை தள்ளிப் போட்டுக் கொள்ளுங்கள் என்று சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார்.
எல்லா வேலைகளும் தயாராக இருந்த நிலையில் எப்படி தள்ளி போடமுடியும் என விவாதமே வந்த நிலையிலும் அந்த உரிமையாளர் முடியாது என்றே சொல்லியிருக்கிறார். உடனே சூர்யா சரி சார் நீங்க உங்கள் உறவினருடன் சந்தோஷமாக இருங்கள், மறுபக்கம் வந்து எட்டி பார்த்தால் அந்த ஆலமரத்தில் நான் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருப்பேன் என்று கூறினாராம். இதை கேட்டதும் அந்த உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே பயந்து போய் அந்த உரிமையாளர் சொன்னபடி வீட்டை சூட்டிங்கை சீக்கிரம் முடித்துக் கொடுத்து விடுங்கள் என்று கூறி கொடுத்துவிட்டாராம்.