விஜய் செய்யத்தவறிய இரண்டு விஷயங்கள் இதுதான்!!.. மனம் திறந்த பிரபல தயாரிப்பாளர்…

Varisu
விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள செய்தியை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். குறிப்பாக அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளதால் இந்த பொங்கல் சூடுபிடிக்கும் பொங்கலாக மாறியிருக்கிறது.

Varisu
“வாரிசு” திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு டிரைலர் இல்லை என இணையத்தில் பேச்சுக்கள் அடிபட்டன. குறிப்பாக விஜய் பேசும் பன்ச் வசனங்கள் அவ்வளவாக கவரவில்லை எனவும் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். எனினும் “வாரிசு” திரைப்படத்தின் எதிர்பார்ப்பு இம்மியளவும் குறையவில்லை என்பதே நிதர்சனம்.

Varisu
கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் “வாரிசு” படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது சரத்குமார், “சூர்ய வம்சம் திரைப்படத்தின் வெற்றி விழாவின்போதே விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறினேன். அது இப்போது உண்மையாகியுள்ளது. விஜய்தான் இப்போது சூப்பர் ஸ்டார்” என கூறியிருந்தார். சரத்குமாரின் இந்த பேச்சு, ரஜினி ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியது. இணையத்தில் பலரும் சரத்குமாரின் பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
அதே போல் அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சியும் தாயார் ஷோபா சந்திரசேகரும் கலந்துகொண்டனர். அப்போது அவர்களை பார்த்த விஜய் அவர்களிடம் சரியாக சிரித்துக்கூட பேசவில்லை. ஏற்கனவே விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சிக்கும் கருத்துமோதல் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. மேலும் கடந்த ஆண்டு ஒரு பட விழாவில் பேசிய எஸ்.ஏ.சி “எனக்கும் விஜய்க்கும் சண்டைதான். எல்லா வீட்டிலும் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சகஜமாக எப்படி சண்டை நடக்கிறதோ அது போலத்தான் இதுவும்” என கூறியிருந்தார்.

SA Chandrasekhar, Shoba, Vijay
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் விஜய் செய்யத்தவறியதாக இரண்டு விஷயங்களை குறித்து பேசியுள்ளார்.
அதாவது “வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் செய்யத்தவறிய விஷயங்கள் இரண்டு என்று நான் நினைக்கிறேன். ஒன்று, அந்த விழாவுக்கு வந்திருந்த தன்னுடைய பெற்றோரிடம் விஜய் சரியாக சிரித்துக்கூட பேசவில்லை. அவர் சிரித்து பேசியிருக்கவேண்டும். இரண்டு, சரத்குமார் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியபோது அதனை விஜய் மறுத்து பேசியிருக்கவேண்டும்.
இதையும் படிங்க: துணிவு படத்தின் செகன்ட் ஆஃப் சும்மா தெறிக்கும்!… கொஞ்சம் மிஸ் ஆனாலும் வாரிசு காலி! என்னப்பா சொல்றீங்க?..

Varisu
இந்த இரண்டை மட்டும் விஜய் செய்திருந்தார் என்றால், ரசிகர்களுடைய மனங்களில் விஜய் எங்கோ உயர்ந்திருப்பார். ஏன் விஜய் அப்படிப்பட்ட விஷயங்களை செய்யவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது” என சித்ரா லட்சுமணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.