இசையை பத்தி என்ன தெரியும்?-பத்திரிக்கையாளரை கண்டபடி கேட்ட இளையராஜா… அப்போவே அப்படித்தான் போல!

இளையராஜாவின் இசை வல்லமையை குறித்து நாம் தனியாக கூறத் தேவையில்லை. 1970களில் இருந்து இப்போது வரை தமிழ் இசை ராஜ்ஜியத்தின் ராஜாவாக கோலோச்சிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான “விடுதலை” திரைப்படத்தில் இளையராஜாவின் இசை மிகச் சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டி வந்தனர்.

மேலும் அத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வேற லெவலில் இருந்ததாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். “நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இக்காலத்துக்கும் பொருந்துவது போல் தனது இசையை மெருகேத்தி வருகிறார் இளையராஜா.

பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதம்

இளையராஜா சமீப காலமாக பொதுவெளியில் கோபப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். இது குறித்து பலரும் அவரை விமர்சிப்பது உண்டு. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது பேட்டி ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா இரு பத்திரிக்கையாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது “இதயம் பேசுகிறது” என்ற பத்திரிக்கையில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் முருகன் என்பவர், ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இளையராஜாவின் இசை குறித்து விமர்சிக்கும் வகையில் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதற்கு இளையராஜா, “உனக்கு இசையை பத்தி என்ன தெரியும்?” என கோபமாக கேட்டாராம்.

அதற்கு பத்திரிக்கையாளர், “உங்களுக்கு பத்திரிக்கைத் துறையை பற்றி என்ன தெரியும்?” என கேட்க இருவருக்கும் இடையே மிகப் பெரிய வாக்குவாதம் நடந்ததாம். ஒரு கட்டத்தில் இளையராஜா, கடுங்கோபத்தில் அங்கிருந்து கிளம்பினாராம். அப்போது பத்திரிக்கையாளர், “நீங்கள் போக வேண்டாம். நீங்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை தொடருங்கள். நான் வெளியே செல்கிறேன்” என கூறி வெளியே சென்றுவிட்டாராம்.

இதையும் படிங்க: நாத்திகனாக இருந்த சுருளிராஜனை ஆத்திகன் ஆக்கிய வியப்பான சம்பவம்… என்னப்பா சொல்றீங்க?

 

Related Articles

Next Story