இளையராஜாவின் அண்ணன் கொலை செய்யப்பட்டாரா? கங்கை அமரன் சொன்ன ஷாக்கிங் தகவல்!...
பிரபல இயக்குனரும் பாஜக நிர்வாகியுமான கங்கை அமரன், இளையராஜாவின் இளைய சகோதரர் என்பதை பலரும் அறிவார்கள். அதே போல் இவர்களுக்கு இரண்டு அண்ணன்களும் உண்டு. அதில் மூத்தவரின் பெயர் பாவலர் வரதராஜன், இளையவரின் பெயர் பாஸ்கர்.
இதில் பாவலர் வரதராஜன், தனது இளமை காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாடகராக வலம் வரத் தொடங்கினார். பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் இசைப்பயணத்தை தொடங்கியது இவரிடம் இருந்துதான். பாவலருக்கு அதிகளவில் குடிப் பழக்கம் இருந்ததால் பிற்காலத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கங்கை அமரன் கலந்துகொண்டார். அப்போது நிருபர் கங்கை அமரனின் வாயாலேயே அவரது அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளிப்படுத்த வைத்துவிட்டார்.
நிருபர், “உங்கள் அண்ணன் பாவலர் எப்படி இறந்தார்?” என்று ஒரு கேள்வியை கேட்க அதற்கு கங்கை அமரன் “அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் பாடியபோது எங்களுக்கு 30 ரூபாயோ அல்லது 40 ரூபாயோதான் கிடைக்கும். ஒரு நாள் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மொட்டை கடிதாசி எழுதியதாக அவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது திமுகவில் இருந்த மதுரை முத்து அவரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர உதவினார். அதன் பின் அண்ணன் திமுக மேடைகளில் பாடத்தொடங்கினார். அவருக்கு 250 ரூபாய் கொடுக்கத் தொடங்கினர். அதன்பின் அண்ணனுக்கு குடிப்பழக்கம் அதிகமாகி விட்டது. ஆதலால் கல்லீரல் கெட்டுப்போய் மருத்துவமனையில் இறந்துவிட்டார்” என்று கூறினார்.
உடனே நிருபர், “நான் உண்மையை சொல்லட்டுமா? உங்கள் அண்ணனுக்கு குடிப்பழக்கம் அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே சிகிச்சை எடுத்துக்கொண்டு நலம் பெற்று மீண்டு வந்தார். அதன் பின் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே போகும்போது அவர் இறந்துப்போகிறார். அதுவும் அவர் இயற்கையாக இறக்கவில்லை.
எந்த கட்சியில் தொடக்கத்தில் இருந்தாரோ அந்த கட்சியினர் ஆட்களை வைத்து கொன்றார்கள். அப்படித்தான் உங்கள் அண்ணன் இறந்தார் என்று ஒரு தகவல்” என கூறினார்.
அதற்கு கங்கை அமரன் “இதை சொன்னால் கஷ்டமாக இருக்கும். அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்த பின்புதான் இறந்தார்” என ஒப்புக்கொண்டார். இவ்வளவு நாட்கள் பாவலர் வரதராஜன் உடல் நலக்குறைவால் இறந்துப்போனார் என கூறப்பட்டு வந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினரால் வரதராஜன் கொல்லப்பட்டத்தை கங்கை அமரன் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மணிரத்னம் படத்தை புகழ்ந்து பேசியதால் கடுப்பான ராஜ்கிரண்… உதவி இயக்குனருக்கு நேர்ந்த சோகம்…