ரஹ்மான் மேல் உள்ள வெறுப்பில் பிரபல இயக்குனரை வைத்து செய்த இளையராஜா..
ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகும் முன் இளையராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தார். கிட்டதட்ட 500 திரைப்படங்களுக்கும் மேல் இளையராஜாவுடன் பணியாற்றி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மணி ரத்னம், புதிய இசையமைப்பாளரை தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்ட போது ஏ ஆர் ரஹ்மானை அணுகினார். அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு. இந்திய இசை வரலாற்றிலேயே ஒரு புதிய புயல் உருவானது என்று கூறினாலும் கூட அது மிகையாகாது. அந்த அளவுக்கு தனது முதல் திரைப்படமான “ரோஜா” படத்திலேயே ரஹ்மான் ரசிகர்களை வியப்படைய வைத்துவிட்டார்.
“யார் இந்த புது பையன், இந்த போடு போடுகிறான்” என இசை விரும்பிகள் அசந்துபோனார்கள். இவ்வாறு ஒரு புது டிரெண்ட்டை உருவாக்கினார் ரஹ்மான். இதனால் அதுவரை இளையராஜாவை பயன்படுத்திக்கொண்டிருந்த இயக்குனர்கள் பலர் ரஹ்மானிடம் தாவினார்கள். இது இவ்வாறு இருக்க சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல இயக்குனர் லியாகத் அலி கான் இளையராஜா மீதான தனது வருத்தத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது 1993 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த “கட்டளை” என்ற திரைப்படத்திற்கு இசையமைக்குமாரு தயாரிப்பு நிறுவனம் ஏ ஆர் ரஹ்மானுக்கு முன் பணத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இயக்குனர் லியாகத் அலி கான் அந்த பணத்தை திரும்ப பெற்று இளையராஜாவிடம் போனாராம்.
ஏற்கனவே இளையராஜாவும் லியாகத்தும் நெருங்கி பழகி வருகின்றனர். இந்த நிலையில் இளையராஜா “கட்டளை” திரைப்படத்திற்கு முழுமையான இசையை அளிக்கவில்லை என இயக்குனர் லியாகத் அலி கான் அப்பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
“கட்டளை” திரைப்படத்திற்காக ஏ ஆர் ரஹ்மானிடம் முதலில் சென்ற தகவல் எப்படியோ இளையராஜாவிற்கு தெரிந்துவிட்டிருக்கிறது” என்ற செய்தியையும் லியாகத் அப்பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
லியாகத் அலி கான் “பாட்டுக்கொரு தலைவன்”, “ஏழை ஜாதி” “சுயம்வரம்” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.