மிஷ்கினுக்கு நோ.. வெற்றிமாறனுக்கு எஸ்!.. பாரபட்சம் காட்டுகிறாரா இளையாராஜா?,,,
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதையும் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதையும் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “வழிநெடுக காட்டுமல்லி”, “கல்லான காடு” போன்ற பாடல்கள் மிகவும் ரசிக்கத்தக்க பாடல்களாக அமைந்திருக்கின்றன. இப்போதும் ராஜா ராஜாதான் என்று இணையவாசிகள் இளையராஜாவை புகழ்ந்து வருகிறார்கள்.
இளையராஜாவை குறித்து பலரும் கேள்விப்பட்ட வகையில் அவரிடம் எந்த இயக்குனர்களும் அபிப்ராயம் கூறவே முடியாது என கூறுவார்கள். அவர் என்ன இசையை அமைத்து தருகிறாரோ அதுவே முடிவானது.
மிஷ்கின் இயக்கிய “நந்தலாலா”, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “சைக்கோ” போன்ற திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த சமயத்தில் மிஷ்கின் பல பேட்டிகளில், “இளையராஜா என்னை நன்றாக திட்டுவார்” என்று பல சம்பவங்களை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன், இளையராஜாவிடம் பணியாற்றியது குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “விடுதலை” திரைப்படத்திற்கு வெற்றிமாறன் சொன்ன அபிப்ராயங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட இளையராஜா, அந்த அபிப்ராயங்களுக்கு ஏற்றவாறு இசையமைத்துக்கொடுத்தாராம். இவ்வாறு மிஷ்கினுக்கு மறுத்ததை வெற்றிமாறனுக்கு செய்துள்ளார் என்று பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன் இந்த தகவலை தனது வலைப்பேச்சு வீடியோவில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: விமலுக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததே இந்த டாப் நடிகர்தான்?… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!