ராஜ்கிரண் படத்தில் இளையராஜா செய்த அற்புதம்… என்னன்னு தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க!!

Rajkiran and Ilaiyaraaja
1993 ஆம் ஆண்டு ராஜ்கிரண், ஆஹனா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அரண்மனைக் கிளி”. இத்திரைப்படத்தை ராஜ்கிரணே தயாரித்து இயக்கியிருந்ததார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Aranmanai Kili
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட் ஆனது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இளையராஜா செய்த அற்புதம் குறித்து ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் ஒரே நாளில் ரெக்கார்டிங் செய்து முடித்துவிட்டாராம் இளையராஜா.
அதே போல் 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண், மீனா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “என் ராசாவின் மனசிலே”. இத்திரைப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். ராஜ்கிரண் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.

En Rasavin Manasile
இதில் “பெண் மனசு ஆழம்” என்று ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய பின்னணி உண்டு. அதாவது “என் ராசாவின் மனசிலே” படத்தின் ரீரெக்கார்டிங்கின் போது ஒரு சோக காட்சியில் வேறொரு சோகப் பாடல் இடம்பெற்றிருந்ததாம்.
உடனே கஸ்தூரி ராஜாவிடம் “இந்த பாடல் இந்த சிச்சுவேஷனுக்கு சரியாக அமையவில்லை. இந்த பாட்டை வேறு எந்த காட்சியிலாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள். நான் வேறு ஒரு புதிய பாடலை கம்போஸ் செய்து தருகிறேன்” என கூறினாராம்.

Pen Manasu Azham Song
அதற்கு கஸ்தூரி ராஜா, “ஏற்கனவே எடிட்டிங் வேலைகள் முடிந்துவிட்டன. இனி எப்படி அந்த பாடல் காட்சியை நான் படமாக்க முடியும்” என கேட்டாராம். அதற்கு இளையராஜா, “நீ எதுவும் மாற்ற வேண்டாம். நான் அந்த காட்சிக்கு ஏற்றவாறே பாடல் போட்டு தருகிறேன்” என கூறினாராம்.

Ilaiyaraaja
அதன் பின் இளையராஜா “பெண் மனசு ஆழம்” என்று தொடங்குகிற பாடலை எழுதி, அதனை தனது சொந்த குரலிலும் பாடி ரெக்கார்டு செய்து தந்திருக்கிறார். அதன் பின் அந்த காட்சியில் அந்த பாடலை பொருத்தியபோது அந்த காட்சியை அந்த பாடல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறது. இசைஞானி என்று சும்மாவா சொன்னார்கள்!
இதையும் படிங்க: இவன் நமக்கு செட் ஆக மாட்டான்… ரஹ்மானை கண்டபடி திட்டிய பாரதிராஜா… ஆனா கிடைச்சதோ மாஸ் ஹிட் பாடல்!!