இளையராஜாவின் இந்த பிரபலமான பாடலில் இவ்வளவு விஷயம் இருக்கா?? ராஜான்னா சும்மாவா!!
1984 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், அம்பிகா, பாண்டியன், சில்க் ஸ்மிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வாழ்க்கை”. இத்திரைப்படத்தை சிவி ராஜேந்திரன் இயக்கியிருந்தார். சித்ரா லட்சுமணன், சித்ரா ராமு ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர்.
இளையராஜா இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த “மெல்ல மெல்ல என்னைத் தொட்டு” என்ற பாடல் காலத்தை தாண்டியும் ரசிக்கும்படியான பாடலாக அமைந்தது.
இந்த நிலையில் “மெல்ல மெல்ல என்னைத் தொட்டு” பாடலின் சுவாரஸ்யமான பின்னணி குறித்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எஸ்கேப் ஆக நினைத்த எம்.எஸ்.வியை துரத்தி பிடித்த எம்.ஜி.ஆர்… ஒரு படத்துக்கு இவ்வளவு அக்கப்போரா?..
“மெல்ல மெல்ல என்னைத் தொட்டு பாடல் உருவான காலகட்டத்தில் அந்த பாடல் இப்படிப்பட்ட பாராட்டை பெறும் எனவும் காலத்தை கடந்து இந்த அளவுக்கு பேசப்படும் எனவும் நாங்கள் யாருமே நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த பாடல் உருவான போது சரணம் இல்லாமல் பல்லவியிலேயே ஒரு பாடல் அமைத்தால் எப்படி இருக்கும் என இளையராஜா கேட்டார். எனக்கும் இயக்குனர் சிவி ராஜேந்திரனுக்கு அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது.
அதன் பிறகுதான் அந்த பாடலை இளையராஜா இசையமைத்தார். அப்பாடல் மிகவும் அற்புதமான பாடலாக அமைந்தது. எனக்கு தெரிந்து தமிழ் பட உலகிலே சரணம் இல்லாமல் பல்லவியை மட்டுமே வைத்து அமைக்கப்பட்ட முதல் பாடல் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்” என அப்பாடலின் பின்னணியை குறித்து பேசியிருக்கிறார் சித்ரா லட்சுமணன்.