“உனக்கு இசைன்னா என்னன்னு தெரியுமாடா??”… கங்கை அமரனை கண்டபடி பேசிய இளையராஜா…

Published on: December 26, 2022
Ilaiyaraaja and Gangai Amaran
---Advertisement---

கிட்டத்தட்ட மூன்று தலைமுறை ரசிகர்களை தனது கைக்குள் வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா, இப்போதும் தனது இளமையான இசையால் தமிழ் மக்களை கட்டிப்போட்டு வருகிறார். பண்ணைபுரத்தில் தொடங்கிய இவரது பயணம், தற்போது பாராளுமன்றம் வரை சென்றிருக்கிறது என்றால் இசை பக்தியும், தீவிர உழைப்புமே காரணம்.

Ilaiyaraaja
Ilaiyaraaja

இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான இளையராஜா, தனது சகோதரரான கங்கை அமரனை கண்டபடி பேசியதாக ஒரு சம்பவத்தை குறித்து தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் “கோழி கூவுது”, “கரகாட்டக்காரன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர். மேலும் பல திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றியவர்.

Gangai Amaran
Gangai Amaran

தொடக்கத்தில் தனது சகோதரரான இளையராஜாவுடன் இணைந்து பல திரைப்படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தார். மேலும் இளையராஜாவின் கால்ஷீட்டையும் கங்கை அமரன்தான் பார்த்துக்கொண்டிருந்தாராம்.

இளையராஜா அறிவாளி, அதே நேரத்தில் திமிரு கொண்டவர் என பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோவில் கூறியிருக்கிறார். மேலும் இளையராஜா பலரின் மேல் கோபப்படுவாராம். அவ்வாறு இளையராஜா யார் யார் மீது எல்லாம் கோபப்பட்டாரோ அவர்களை எல்லாம் நேரில் சந்தித்து சமாதானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தாராம் கங்கை அமரன்.

Gangai Amaran and Ilaiyaraaja
Gangai Amaran and Ilaiyaraaja

அதே போல் கங்கை அமரன் இளையராஜாவை விடவும் புத்திசாலியாகவும், கற்பனைத் திறன் மிகுந்தவராகவும் திகழ்ந்தாராம். எந்த எந்த ராகங்களை எப்படி எப்படி எல்லாம் சரியாக மாற்றிப்போடலாம் என்ற வித்தை தெரிந்தவராக கங்கை அமரன் திகழ்ந்தாராம்.

கங்கை அமரன் இசையமைப்பாளராக ஆனது இளையராஜாவிற்கு பிடிக்கவில்லையாம். “டேய் உனக்கு எங்கடா இசை தெரியும். மியூசிக்ன்னா என்னன்னு தெரியுமாடா?” என கங்கை அமரனை அலட்சியப்படுத்தினாராம் இளையராஜா. “இது எல்லாம் நீங்க போட்ட பிச்சைதான்” என பணிந்துப்போனாராம் கங்கை அமரன்.

இதையும் படிங்க: கண்ணதாசனின் பாட்டை தவறாக எழுதிய பஞ்சு அருணாச்சலம்… அப்போ இத்தனை நாள் தப்பாத்தான் பாடுறோமா!!

Gangai Amaran and Ilaiyaraaja
Gangai Amaran and Ilaiyaraaja

இளையராஜா வெறும் இசையமப்பாளர்தான், ஆனால் கங்கை அமரன் பல திரைப்படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். தான் இயக்குனராகப் போவதாக கூறியபோது “உனக்கு டைரக்சன்னா முதலில் என்னன்னு தெரியுமா?” என நக்கல் அடித்தாராம் இளையராஜா. இவ்வாறு தனது வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.