இந்த படத்தை போய் பிடிக்கலைன்னு சொல்லிருக்காரே… இளையராஜா வெறித்தனமாக இசையமைத்த ஹிட் படத்தின் பின்னணி!!

Ilaiyaraaja
இளையராஜாவும் பாரதிராஜாவும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். பாரதிராஜா இயக்கிய பல திரைப்படங்களுக்கு இளையராஜா மிகச் சிறப்பான இசையை கொடுத்துள்ளார். இதனிடையே பாரதிராஜா இயக்கிய மாபெரும் வெற்றியடைந்த திரைப்படத்தை பார்த்த இளையராஜா “படம் பிடிக்கவில்லை” என கூறினாராம். அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Bharathiraja and Ilaiyaraaja
1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் “முதல் மரியாதை’. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகு இத்திரைப்படத்தை பார்த்த சிவாஜியும் அவரது குடும்பத்தினரும் பாரதிராஜாவை பாராட்டித்தள்ளினார்களாம்.
ஆனால் இத்திரைப்படத்தை பார்த்த இளையராஜாவிற்கும், பஞ்சு அருணாச்சலத்திற்கும் இத்திரைப்படம் பிடிக்கவில்லையாம். இதனை மிக வெளிப்படையாகவே பாரதிராஜாவிடம் கூறினார்களாம்.

Muthal Mariyathai
இளையராஜா மீதும் பஞ்சு அருணாச்சலத்தின் மீதும் மிகப்பெரிய அபிப்ராயம் வைத்திருந்தவர் பாரதிராஜா. ஆதலால் அவர்கள் “முதல் மரியாதை” திரைப்படத்தை பிடிக்கவில்லை என கூறியது பாரதிராஜாவின் மனதை கலங்கடித்ததாம். எனினும் அந்த திரைப்படத்திற்கு மிகச்சிறந்த இசையை கொடுத்திருந்தார் இளையராஜா.

Ilaiyaraaja
எனினும் “முதல் மரியாதை” திரைப்படம் வெளிவந்த பிறகு மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இளையராஜாவிற்கு சம்பளம் தருவதற்காக பாரதிராஜா அவரை பார்க்கச் சென்றிருந்தாராம். அப்போது இளையராஜா ஒரு பைசா கூட வாங்கவில்லையாம்.

Ilaiyaraaja
“இந்த படம் எனக்கு சுத்தமாக பிடிக்காமல்தான் இசையமைத்தேன். ஆதலால் இந்த படத்திற்கு நான் சம்பளம் வாங்கமாட்டேன்” என கூறினாராம் இளையராஜா. எனினும் அத்திரைப்படத்திற்காக மிகவும் அற்புதமான இசையை தந்திருந்தார் இளையராஜா.