இவர் பாரதிராஜாவா? இளையராஜாவா? கன்ஃப்யூஸ் ஆன ரசிகர்… அடப்பாவமே!!

Bharathiraja and Ilaiyaraaja
தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்த பாரதிராஜா, “16 வயதினிலே”, “அலைகள் ஓய்வதில்லை”, “மண் வாசனை’, “கிழக்கு சீமையிலே” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கிராமத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் கைத்தேர்ந்தவர் பாரதிராஜா. குறிப்பாக கிராமத்து கதைகளுக்கான ஒரு டிரெண்ட் செட்டராகவே பாரதிராஜா திகழ்ந்தார். எனினும் “டிக் டிக் டிக்”, சிகப்பு ரோஜாக்கள்” போன்ற பல த்ரில்லர் திரைப்படங்களையும் பாரதிராஜா இயக்கியுள்ளார்.

Bharathiraja
வாலிபமே வா வா
1982 ஆம் ஆண்டு, கார்த்திக், ராதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வாலிபமே வா வா”. இத்திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
பாரதிராஜாவா? இளையராஜாவா?
“வாலிபமே வா வா” திரைப்படத்திற்காக பாரதிராஜாவும், சித்ரா லட்சுமணனும் கோவையில் லோக்கேஷன் பார்க்க சென்றார்களாம். அப்போது அங்கே ஒரு டாக்டர் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கே இருந்த டாக்டர் பாரதிராஜாவையும் சித்ரா லட்சுமணனையும் வரவேற்று சிறப்பாக உபசரித்தாராம். அப்போது அந்த டாக்டர் பாரதிராஜாவை பார்த்து “இப்போதெல்லாம் நீங்கள் பாடுவதை நிறுத்திவிட்டீர்களாமே ஏன்?” என கேட்டாராம்.

Bharathiraja
அவர் கேட்ட கேள்வியால் பாரதிராஜாவும் சித்ரா லட்சுமணனும் நடுங்கிப்போனார்களாம். அதாவது அந்த டாக்டர் பாரதிராஜாவை இளையராஜா என நினைத்துத்தான் அவ்வளவு நேரமும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார் என அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்ததாம்.
இளையராஜா அந்த காலகட்டத்தில் “பக்தி பாடல்கள் தவிர இனி வேறு பாடல்களை பாட மாட்டேன்” என அறிவித்திருந்தாராம். அதனை மனதில் வைத்துத்தான் அவர் அப்படி கேட்டிருக்கிறார்.
ஜெய்சங்கருக்கு நடந்த சம்பவம்
இதற்கு முன்பு இதே போல் ஜெய்சங்கருக்கும் ஒரு சம்பவம் நடந்ததாம். அதாவது ஒரு முறை ஜெய்சங்கர் மனைவியின் தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாம். அத்திருமணத்திற்கு அழைப்பிதழ் வைக்க ஒரு அமைச்சரின் வீட்டிற்கு சென்றாராம்.
அந்த அமைச்சரின் வீட்டில் பந்தோபஸ்துக்கு இருந்த ஒரு போலீஸ்காரர், ஜெய்சங்கரை பார்த்து சல்யூட் அடித்தாராம். அதனை பார்த்த ஜெய்சங்கர் “நமக்கு இப்படி ஒரு ரசிகரா?” என பூரித்துப் போனாராம்.
இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவை தூக்கி கீழே போட்ட பிரபல நடிகர்… “தயவு செய்து ஷூட்டிங் வாம்மா”… வீடு தேடிப்போய் கெஞ்சிய தயாரிப்பாளர்…

Jaishankar
அப்போது அந்த போலீஸ்காரரை நலம் விசாரித்த ஜெய்சங்கர் “நான் நடித்த திரைப்படங்களில் எந்தெந்த திரைப்படங்களை பார்த்திருக்கிறாய்?” என கேட்டாராம். அதற்கு அந்த போலீஸ்காரர் “நீங்க நடிச்ச காதலிக்க நேரமில்லை படத்தை மட்டும் பத்து தடவை பார்த்திருக்கிறேன் சார்” என கூறினாராம். இதனை கேட்டதும் ஜெய்சங்கர் நொந்துப்போய்விட்டாராம்.
இது குறித்து பேசிய சித்ரா லட்சுமணன் “இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்புதான். ஆனாலும் இது போன்ற தருணங்களில் இருந்து அந்த குறிப்பிட்ட நபர்கள் மீள்வது மிகவும் கடினம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.