பெண்களை போற்றும் திரைப்படம்…. இசையமைக்க மாட்டேன் என அடம்பிடித்த இளையராஜா… அடக்கொடுமையே!
1992 ஆம் ஆண்டு சத்யராஜ், சுகன்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருமதி பழனிச்சாமி. இத்திரைப்படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவது போன்ற கதையம்சத்துடன் அமைந்த இத்திரைப்பட,ம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு இளையராஜா முதலில் இசையமைக்க மறுத்தாராம். அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
“திருமதி பழனிச்சாமி” திரைப்படம் முடியும்போது அதில் “ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட, தினமும் 10,000 பேருக்கு சாப்பாடு போடுவதை விட ஒருத்தரை படிக்க வை, அதுதான் தர்மம்” என்ற வாசகம் திரையில் தோன்றியதாம். இத்திரைப்படம் உருவாகி முடிந்த பிறகு கிளைமேக்ஸ் காட்சியை இளையராஜாவிற்கு திரையிட்டுக் காட்டினார்களாம்.
அப்போது இந்த வாசகங்களை பார்த்த இளையராஜா, “இந்த படத்துக்கு நான் இசையமைக்க மாட்டேன்” என கூறிவிட்டாராம். “என்னய்யா இப்படி போட்டுருக்க, கடவுள் இல்லைன்னா இதுலாம் நடக்குமா?” என்று சண்டை போட்டாராம்.
அதன் பின் இளையராஜாவை இத்திரைப்படத்திற்கு இசையமைக்க சம்மதிக்க வைக்க வேண்டி, அந்த வாசகத்தை வேறு மாதிரி மாற்றினார்களாம். அதாவது “மகாத்மா காந்தி 4 ஆண் குழந்தைகளை பெற்றார். ஒன்னு கூட அவரது பெயர் சொல்லும்படி இல்லை. ஆனால் ஜவஹர்லால் நேரு ஒரே ஒரு பெண்ணைத்தான் பெற்றார். இந்திரா காந்தி. அவரது பெயரை உலகமே கூறியது” என்று மாற்றினார்களாம். அதன் பிறகுதான் இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டாராம். இத்தகவலை ஆர்.சுந்தர்ராஜன் ஒரு பட்டிமன்றத்தில் பகிர்ந்துக்கொண்டார்.
எனினும் யூட்யூப்பில் இத்திரைப்படம் இப்போதும் இருக்கிறது. அதன் கிளைமேக்ஸில் “கோயில் இல்லாத ஊர்ல குடியிருக்க வேணாம்ன்னு சொல்லியிருக்காங்க. கோயில் கூட இல்லாம இருக்கலாம் ஆனா பள்ளிக்கூடம் இல்லாம இருக்கவே கூடாது” என்ற வாசகத்தோடு இத்திரைப்படம் முடிகிறது.
இதையும் படிங்க: இது என்னுடைய கதை… விஜய் ஆண்டனி மீது குற்றச்சாட்டு வைத்த நபர்… மீண்டும் மீண்டுமா??