இளையராஜா சொன்னது மிகப்பெரிய பொய்- சீறும் பிரபல தயாரிப்பாளர்… என்னவா இருக்கும்?
நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 3 ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனோபாலா ஒரு நடிகர் மட்டுமல்லாது ஒரு சிறந்த இயக்குனரும் கூட. "பிள்ளை நிலா", "ஊர்க்காவலன்", "என் புருசன்தான் எனக்கு மட்டுந்தான்", "மல்லுவேட்டி மைனர்" போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கியவர். மேலும் "சதுரங்க வேட்டை", "பாம்புச்சட்டை", "சதுரங்க வேட்டை 2" போன்ற திரைப்படங்களையும் தயாரித்தவர். இவ்வாறு ஒரு பன்முக கலைஞராக வலம் வந்தவர் மனோபாலா.
மனோபாலாவின் இறப்பிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவில், "கோடம்பாக்கம் பாலத்தில் என்னை பார்ப்பதற்காக நின்றுகொண்டிருந்த இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர்" என பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. "ஒருவரின் இறப்பு செய்தியில் தனது புகழை தம்பட்டம் அடிப்பது போல் பேசுகிறார் இளையராஜா" என்று விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், "இளையராஜா சொன்னது பச்சை பொய். அவரது அலுவலகத்தில் அவரை தனது திரைப்படங்களில் இசையமைக்குமாறு வாய்ப்பு கேட்டு பல இயக்குனர்கள் நின்றிருக்கிறார்களே தவிர அவர் காரில் செல்லும்போது யாரும் கோடம்பக்கம் பாலத்தில் நின்று அவரை பார்ப்பதற்காக காத்திருக்கவில்லை. குறிப்பாக மனோபாலா அப்படி செய்ததே இல்லை" என கூறியிருக்கிறார்.
சமீப காலமாக இளையராஜா பேசுவது எல்லாம் சர்ச்சையில்தான் சென்று முடிகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியது மிகப்பெரிய சர்ச்சையை உண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.