எனக்கும் இளையராஜாவுக்கும் இதுதான் பிரச்னை.! உண்மையை போட்டுடைத்த திரைக்கதை மன்னன்.!
![எனக்கும் இளையராஜாவுக்கும் இதுதான் பிரச்னை.! உண்மையை போட்டுடைத்த திரைக்கதை மன்னன்.! எனக்கும் இளையராஜாவுக்கும் இதுதான் பிரச்னை.! உண்மையை போட்டுடைத்த திரைக்கதை மன்னன்.!](http://cinereporters.com/wp-content/uploads/2022/01/ilaiyaraja.png)
1980's களில் இசைஞானி இளையராஜா இல்லாத திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு அவரது ஆதிக்கம் திரையுலகில் இருந்தது. தற்போது வரையில் இசையில் அவரது பெயரை குறிப்பிடாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு முன்னனி இயக்குனர்கள் மட்டுமின்றி எந்த இயக்குனர் படமென்றாலும் படத்தின் இசை தரமாக இருக்கும்.
இசைஞானி இளையராஜா இசையமைத்த படம் என்றால் படம் விரைவாக விற்றுவிடும் சூழல். அப்படி இருந்த சமயத்தில் அவரை சுற்றி சில சர்ச்சைகளும் எழுந்தது உண்டு. அது, அவர் அதிகமாக கோபப்படுவார் என பலர் கூறுவதுண்டு.
இயக்குனர் பாக்யராஜ் தான் எழுதி இயக்கிய ஆரம்பகால படங்களுக்கு இளையரஜா பாடல் இசையமைத்துள்ளார். திடீரென இது நம்ம ஆளு திரைப்படத்திற்காக இசையமைப்பாளராக பாக்கியராஜ் களமிறங்கிவிட்டார்.
இந்த நிகழ்வு எப்படி நடந்தது என பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், அது எப்படி என தெரியவில்லை. வழக்கமாக அடுத்த படம் எப்போன்னு முன்னாடியே சொல்லு அப்போதான் வசதியா இருக்கும் என இளையராஜா பாக்யராஜிடம் கூறினாராம். அவரும் சரியென, இது நம்ம ஆளு திரைப்பட வேலைகளை முடித்துக்கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், இளையராஜா அலுவலர் பாக்யராஜிடம், நீங்கள் இளையரஜாவை வீட்டில் சென்று பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அது பாக்யராஜிற்கு பிடிக்கவில்லை. வேலையை அலுவலகத்தில் வைத்து செய்தால் தான் சரியாக இருக்கும். ஏதேனும் விசேஷம் என்றால் வீடு செல்லலாம். வேலையை எதற்கு வீடு வரை கொண்டு செல்ல வேண்டும் என வருத்தப்பட்டு, தானே இசையமைப்பாளராக களமிறங்குகிறேன் என நண்பரின் உதவியுடன் இது நம்ம ஆளு திரைப்படத்தில் இருந்து சில படங்களுக்கு அவரே இசையமைத்து விட்டார். அந்த பாடல்களும் தற்போது வரை ஹிட் லிஸ்ட்தான்.