இளையராஜாவை சீண்டிய பிரபல இயக்குனர்... அவருட்ட இப்படி தான் வேலை வாங்கலாம்... பலே கில்லாடி தான் சார் நீங்க...
இளையராஜாவை தமிழ் சினிமா திரையுலகத்தின் பெரிய ஆளுமை என்று தான் சொல்ல வேண்டும். அவர் நினைத்து விட்டால் அதையே தான் செய்வார். இதற்கு தமிழ் சினிமாவில் நடந்த ஒரு பிரளயம் தான் காரணமாக இருக்கிறது.
கொடைக்கானலுக்கு ஒரு படத்தின் கம்போஸிங்கிற்காக ராஜாவும் மற்றும் முத்துராமன் இருவரும் செல்கின்றனர். மூன்று நாள் பயணம் என நினைத்து வந்தவர்களுக்கு வந்த வேலை ஒரே நாளில் முடிந்து விட்டது. சரி மீது இரண்டு நாளில் ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்து அங்கையே தங்கி இருக்கிறார்கள்.
ராஜாவின் கொடைக்கானல் பயணம்:
இந்த இடைவேளையில் ராஜா 6 விதமான ட்யூன்களை போட்டு இருந்தார். இதை கேட்ட முத்துராமனுக்கு அதில் ஒரு பாடல் மிகவும் பிடித்து விட்டது. அதை எனக்கு கொடுக்கிறாயா எனக் கேட்டார். ஆனால் ராஜாவோ 6 பாடல்களையும் ஒரே படத்துக்கு தான் கொடுப்பேன் என மறுத்துவிட்டார். தொடர்ந்து இச்செய்தி தமிழ் சினிமாவினரிடம் பரவியது.
இந்த செய்தி அறிந்த பல இயக்குனர்கள் முயற்சி செய்யலாம் என ராஜாவிடம் அந்த பாடல்களில் ஒரு ட்யூன் வேண்டும். 2 ட்யூன் வேண்டும் என கேட்கின்றனர். யாருக்கும் ராஜா மனம் இறங்கவே இல்லையாம். கொடுத்தால் ஒரே படத்துக்கு தான் எல்லா பாடல்களையுமே கொடுப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்து இருக்கிறார்.
வைதேகி காத்திருந்தாள்:
இந்த செய்தியை இயக்குனர் சுந்தர்ராஜன் காதுக்கு செல்கிறது. தாமும் முயற்சி செய்யலாம் என ராஜாவிடம் வந்து கேட்டு பார்க்கிறார். படத்தின் கதையை சொல்ல சொல்கிறார் ராஜா. ஒரு சொட்டு தண்ணீர் இல்லாததால் காதலியை இழக்கும் நாயகன்... ஆற்றில் வெள்ளம் வந்து வாழ்க்கையை இழக்கிற நாயகி… இவர்கள் வாழ்க்கை தான் கதை என சொல்லி முடிக்கிறார்.
இதை கேட்ட இளையராஜா படத்திற்கு ஓகே சொல்கிறார். தொடர்ந்து, ஏவிஎம் தயாரிப்பில் விஜயகாந்தின் நடிப்பில் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. 5 பாடல்களை படத்தில் யூஸ் செய்துவிட்ட சுந்தராஜனுக்கு 6வது பாட்டை எங்கே பயன்படுத்த என்று தெரியாமல் திணறி இருக்கிறார். அவரிடம் போய் கேட்டால் கண்டிப்பாக கத்திவிடுவார் என்ன செய்வது என குழம்பி இருக்கிறார்.
சுந்தராஜனின் சாதுர்யம்:
அப்போது அவருக்கு ஒரு யோசனை கிடைத்து இருக்கிறது. இப்படிதான் பேசணும் என முடிவு செய்துக்கொண்டு கிளம்புகிறார். அண்ணே நீங்க போட்ட ஒரு ட்யூனுக்கு வேலை இல்லை எனக் கூறிவிட்டார். அவரை பார்த்த இளையராஜா கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். அந்த ட்யூன் தான் இடம் இல்லை. ஆனால் கொஞ்சம் மாற்றி கொடுத்தால் பயன்படுத்த காட்சிகள் இருக்கிறது என கூறுகிறார்.
அதுவும் ஆக்ரோஷமான நடன பாட்டாக வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார். வாழ்க்கையே முடிந்த பரதம் தெரிந்த நாயகி தன் தந்தையின் ஜதிக்கு பாடுவதே என சுந்தராஜன் சிக்சுவேசன் சொல்ல வாலி வரிகளில் இளையராஜா எழுதிக்கொடுத்த பாடல் தான் இன்றைய காலத்துக்கும் ஹிட் லிஸ்ட்டில் அமைந்திருக்கும் அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் பாடல்.