More
Categories: Cinema News latest news

இப்பனு இல்ல.. அப்போதிருந்தே இப்படித்தான் போல! டி.எம்.எஸுக்கே ஆட்டம் காட்டிய இசைஞானி

Ilaiyaraja TMS: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக தனது இசையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்னூள் அடக்கி ஆண்டு வருபவர் இசைஞானி இளையராஜா. 70களில் இருந்து தனது இசை பயணத்தை இன்று வரை ஒரு வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு வருகிறார். கிட்டத்தட்ட நான்கு ஐந்து தலைமுறைகளுக்கும் இவருடைய இசையில் அமைந்த பாடல்கள் ஒரு பக்க பலமாக இருந்து வருகின்றன.

இன்னும் அவருடைய இசையில் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் அவர் வீட்டு வாசலில் ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ரஜினி கமல் இவர்களின் படங்கள் ஹிட்டானதுக்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைந்ததும் இவருடைய இசையில் அமைந்த பாடல்கள் தான். இவரைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் 80களில் உள்ள நடிகர்கள் இளையராஜாவை பற்றி மிகப் பெருமையாக தான் பேசிக் கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: விஜய் பட வீடியோ வரும்போது என் போட்டோ வரணும்!.. அஜித்தை பங்கம் செய்த பிரபலம்!..

அந்த அளவுக்கு அவருடைய இசை ஒரு பெரிய மேஜிக்கையே செய்திருக்கிறது. முன் கோபக்காரர், தனக்கு எது சரி எனப் படுகிறதோ அதை செய்யக்கூடியவர், அதனால் மற்றவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் கவலை இல்லை என்ற மனநிலை உள்ளவர் என பல விமர்சனங்கள் இவரை பற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் அதற்கு எதுக்குமே இதுவரை இளையராஜா செவி சாய்த்ததே இல்லை. இந்த நிலையில் அந்த காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி இவர்களின் படங்களில் அமைந்த பெரும்பாலான பாடல்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். எம்ஜிஆர் படத்தில் எம்ஜிஆர் குரலில் தனது குரலை மாற்றி பாடக்கூடிய வல்லவர்.

இதையும் படிங்க: காலையில போய் பார்த்தா அழுதுக்கிட்டு இருப்பாரு!.. ரஜினி பற்றி ஷாக்கிங் தகவல் சொன்ன இயக்குனர்…

சிவாஜி படம் என்றால் சிவாஜி குரலில் பாடக்கூடிய வல்லமை பெற்றவர். இப்படி அந்த காலத்தில் ஒரு பெரிய பாடகராக வலம் வந்து கொண்டிருந்தார் டி எம் சௌந்தர்ராஜன். இளையராஜாவின் காலகட்டத்திற்கு பிறகு எஸ்பிபி ஆதிக்கம் செலுத்திய ஒரு பாடகராக வலம் வந்தார். இந்த நிலையில்  ‘நான் வாழவைப்பேன்’ என்ற படத்தில் என்னோடு பாடுங்கள் என்ற பாடலை முதலில் பாடியது டி எம் சௌந்தர்ராஜன் தானாம்.

ஆனால் அந்தப் பாடலை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு அதே பாடலை எஸ் பி பாலசுப்ரமணியனை வைத்து பாட வைத்திருக்கிறார் இளையராஜா. இதைப் பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் முதலில் டி எம் எஸ் தான் பாடலை பாடினார். ஆனால் அது வேண்டாம் என சொல்லி எஸ்பிபிஐ பாட வைத்தார் இளையராஜா. அதற்கு என்ன காரணம் என இதுவரை யாருக்குமே தெரியவில்லை என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: ரொமான்ஸ் வராதுன்னு கிண்டலடித்த சினிமா உலகம்!.. அந்த படத்தில் புகுந்து விளையாடிய எம்.ஜி.ஆர்..

Published by
Rohini

Recent Posts