ட்யூன் கேட்டு வந்த இயக்குனரை அவமானப்படுத்திய இளையராஜா!.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்..
தமிழ் சினிமாவில் 40 வருடத்திற்கும் மேலாக தன் இசையால் அனைவரையும் ஆட்சி செய்து கொண்டு வருபவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் ஆரம்பித்த இவரது இசைப்பயணம் இன்று விடுதலை படம் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
காலத்திற்கு ஏற்ப நடிகர்களுக்கு ஏற்ப புதுபுது பொலிவுடன் தன் இசையின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் இளையராஜா. அதே சமயம் இவரைப் பற்றிய பல சர்ச்சைகளும் வதந்திகளும் இன்னும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் இளையராஜாவை பற்றி ஒரு தகவலை சமீபத்தில் கூறினார். அதாவது சினிமாவில் பாரதிகண்ணன் என்ற ஒரு இயக்குனர் இருந்தாராம். அவர் எடுக்கும் ஒரு படத்திற்கு இசைக்காக இளையராஜாவை அணுகியிருக்கிறார்.
அவரும் சரி என்று சொல்ல தனது ஸ்டூடியோவிற்கு அந்த இயக்குனரை வரவழைத்திருக்கிறார். அவரும் இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்றிருக்கிறார். இளையராஜாவை பொறுத்தவரைக்கும் பாரதிராஜா மாதிரி ஒரு இயக்குனராக இருந்தால் மட்டுமே தன் பக்கத்தில் உட்கார வைத்து ட்யூன் போட்டு காட்டுவார்.
ஆனால் சிறு இயக்குனர்கள் என்றால் வெளியே அமரவைத்து காத்திருக்க வைப்பார். அதே மாதிரி நிலைமை தான் பாரதிகண்ணனுக்கும். அவரை வெளியே உட்காரவைத்திருக்கிறார். அதன் பின் இளையராஜா அவ்வப்போது வெளியே வரவும் உள்ளே போகவும் இருந்திருக்கிறார். அவர் வரும் போதும் போகும் போதும் பாரதிகண்ணன் எழுந்து நிற்கவும் அமரவும் இருந்திருக்கிறார்.
இதை பார்த்த இளையராஜா பாரதிகண்ணனிடம் ஏன் அடிக்கடி எழுந்து உட்கார இருக்கிற? பேசாமல் நின்று கொண்டே இரு என்று சொல்லிவிட்டாராம். பாரதிகண்ணனும் அவர் இசையமைத்து முடிக்கிற வரைக்கும் வெளியே நின்று கொண்டே இருந்திருக்கிறார்.
இதையும் படிங்க : 96 படத்தில் தவறவிட்ட வாய்ப்பு- இவர் மட்டும் நடிச்சிருந்தா?… வருத்தத்தை பகிர்ந்த பொன்னியின் செல்வன் நடிகை…