இளையராஜா நிறைய பரீட்சார்த்தமான முயற்சிகள் பண்ணியிருப்பாரு. அப்படி ஒரு படத்துக்கு அவர் போட்ட மெட்டுக்குப் பாடல் எழுத முடியாம நிறைய பாடலாசிரியர்கள் திண்டாடி விட்டார்களாம்… அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
படத்தின் கதையோட கரு இதுதான். பெரிய கனவோடு கதாநாயகன் இருக்கிறான். நமக்கு இவ்வளவு அழகான பெண் வருவாள் என்று. ஆனால் அவனுக்குக் கிடைக்கிறதோ குண்டான பொண்ணு. வாழ்க்கையில விரக்தி அடையற அவன் வேறொரு பொண்ணோடு தொடர்பு வைத்துக் கொள்கிறான். இதனால் நடக்கும் கலாட்டா தான் படம்.
இந்தப் படத்துல ஒரு வித்தியாசமான மெட்டு. யாருக்கிட்ட வேணாலும் கொடுங்க என கொடுக்கிறார். ஒரு பாடலாசிரியர்கிட்ட மெட்டைக் கொடுக்குறாங்க. அது திரும்ப வருது. இன்னொரு பாடலாசிரியர்கிட்ட கொடுக்க அதுவும் திரும்பி வருது. இப்படி சுவத்துல அடிச்ச பந்து மாதிரி மெட்டு திரும்ப திரும்ப வருது. கடைசியில ஒரு பாடலாசிரியர்கிட்ட கொடுக்கிறாங்க. அது யாருன்னா அவரு தான் கவிப்பேரரசு வைரமுத்து.
இதையும் படிங்க… இளையராஜாவிடம் அடம்பிடித்த ராமராஜன்.. சாமானியன் படத்துல யாருமே பார்க்காத ஒண்ணு இருக்காம்!
பாக்கியராஜ் படங்கள்ல வைரமுத்து அதிகமா எழுதல. சரி. கொடுங்க எழுதி அனுப்புறேன் என்கிறார். ரெக்கார்டிங் தியேட்டர்ல இளையராஜாவின் உதவியாளர் சுந்தரராஜன் இருக்காரு. பாக்கியராஜின் உதவியாளர் பார்த்திபன் இருக்காரு. அப்போது பாட்டோடு வைரமுத்து உள்ளே வருகிறார். சுந்தரராஜன் அவரைப் பார்த்ததும் நமட்டுச்சிரிப்புடன் என்ன கவிஞரே, பாடல் ரெடியாயிட்டான்னு கேட்கிறார். அப்போ அவரு எதுக்காக அப்படி கேட்டாருன்னா மூணு, நாலு பேருக்கிட்ட பாட்டு போயிட்டு திரும்பி வந்துட்டு. இவரும் எழுதியிருக்க மாட்டாருன்னு நினைக்கிறாங்க. அதே மாதிரி பாக்கியராஜ், பார்;த்திபன் எல்லாரும் பார்க்கிறாங்க.
அப்போ தான் வைரமுத்துவுக்கும் விவரம் புரியுது. சுந்தரராஜனும் சொல்கிறார். இந்த மெட்டு எப்படி இருக்குதுன்னா சர்ர்ருன்னு போகுது. ரொம்ப வித்தியாசமா இருக்குது. அதுதான் ‘சிட்டுக்குருவி வெட்கப்படுது’ பாட்டு. படம் சின்னவீடு.இந்தப் பாட்டுக்கான சூழல். கள்ளக்காதலியும், பாக்கியராஜூம் கனவில பாடற மாதிரியான பாட்டு. காட்சியையே ரொம்ப வித்தியாசமா பாக்கியராஜ் எடுத்திருப்பாரு.
ஒரு மெத்தை எல்லா இடத்துலயும் பறக்கும். திடீர்னு பறக்கும் தட்டுல பறப்பாங்க. இந்த மெட்டு பறக்குற மெட்டு. சிக்சாக்ல இருக்கும். நேராவே இருக்காது. ‘தத்தத்தரதா, தத்ததரதா…’ அப்படின்னு போகும். சொல்லும்போதே மெட்டு பயமா இருக்கும். எப்படிடா எழுதுறதுன்னு வரும்?
அதுவும் ஒரு கள்ளக்காதலிக்கு எப்படி எழுதணும்னு ஒரு சவால் இருக்கும். இந்த மெட்டைப் பார்த்த உடனே வைரமுத்து இது ‘பறக்குற மெட்டு’ன்னு கண்டுபிடிச்சிட்டாரு. அதனால இளையராஜாக்கிட்ட கலந்துக்காம இந்த மெட்டை பறக்குற மாதிரி எழுதியிருப்பாரு.
‘சிட்டுக்குருவி வெட்கப்படுது, பெட்டைக்குருவி கற்றுத் தருது. தொட்டுப் பழக பழக சொர்க்கம் வருது, கட்டித் தழுவ தழுவ கட்டில் சுடுது, அந்தப் புரமே, வருமே தருமே முத்திரை ஒத்தடம் இட்டதும் நித்திரை வருமே…’ என்ன ஒரு அழகான பல்லவி என்று பாருங்கள். சொல்லை சொல்லிப் பார்த்தா எவ்வளவு வேகமா இருக்கு. இதுவே நமக்குப் புரியாது. மெட்டும் அப்படித்தான் இருக்கு.
இந்தப் பாடலில் லேடீஸ் வாய்சும், ஜென்ட்ஸ் வாய்சும் ஒன்றாக சேரும். சரணத்திலும் இதே பாணி தான் வருகிறது. அதே போல முடிக்கிற இடத்தில் ரொம்பவே அனாயசமாக மெட்டு போட்டிருப்பார். அதற்கு வைரமுத்து, பட்டுச்சிறகை பறவை பருவ சுமையைப் பெறுமே என்று எழுதியிருப்பார்.
2வது சரணத்தில், கள்ளக்காதலையும் வடிவமைத்திருப்பார் வைரமுத்து. ‘நித்தம் எச்சில் இரவு, இன்பம் மட்டும் வரவு, முத்தம் மொத்தச் செலவு…’ என ஆண் பாட, பெண் ‘மொட்டுக் கட்டும் அழகு, மெட்டுக்கட்டும் பொழுது, கிட்டத் தொட்டுப் பழகு’ என்று பாடுவாள். அதற்கு ஆண் ‘ஆஹா கள்ளக்கனியே அள்ளச்சுகமே, வெட்கப்பறவை விட்டுத்தருமோ’ என பாட, பெண் ‘மன்னன் மகிழும் தெப்பக்குளமும் செப்புக்குடமும் இவளே…’ அப்போது ஆண், ‘அங்கம் முழுதும் தங்கப்புதையல் மெத்தைக் கடலில் முத்துக்குளியல்’ என அருமையாக வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பார் வைரமுத்து.
இந்தப் பாடல் பாடும்போது அதன் வேகத்தில் நம்மால் வரிகளைக் கவனிக்க முடியாது. ஆனாலும் இந்த மெட்டில் நாம் லயித்துப் போவோம் என்பது மட்டும் உறுதி.
மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…