குருநாதரின் கோபத்திற்கு ஆளான இளையராஜா!.. சவால் விட்டு வெளியே வந்தவர் என்ன ஆனார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவனாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரது இசை இந்தியா முழுவதும் பரிணமித்து இவரின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைத்து 1976ல் சினிமாவில் அறிமுகமானார் இளையராஜா.
கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தன் ஆளுமையை நிரூபித்தவர். இன்னமும் தன் பணியை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். பல படங்களுக்கு இவரின் இசை விருந்தாகிக் கொண்டு இருக்கின்றன.
தமிழக நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை என அனைத்து புலமைகளிலும் கற்றுத் தேர்ந்தவர் இளையராஜா. சிறுவயதில் இருந்தே கித்தார் வாசிப்பதிலும் ஆர்மோனியம் வாசிப்பதிலும் மிகவும் ஆர்வமாக இருந்திருக்கிறார். நாடக மேடைகளில் வாசிப்பது, கச்சேரியில் வாசிப்பது என தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் இளையராஜா.
இதையும் படிங்க : தனுஷ் பாடலை பாடியதால் ரத்த வாந்தி எடுத்த பிரபல பாடகர்… ஒரு அதிர்ச்சி சம்பவம்…
இந்த நிலையில் இவருக்கு குருவாக இருந்தவர் தன்ராஜ் என்ற மாஸ்டர். அவரிடம் கிட்டார், பியானோ போன்றவற்றை கற்றவர் இளையராஜா. தன்னிடம் கற்றுக் கொள்ள வரும்போது இடையிலேயே சில சமயங்களில் கச்சேரி என்று போய்விடுவாராம். ஒழுங்காக வகுப்பறைக்கு வரமாட்டாராம்.
இதனால் அவரின் குருவான தன்ராஜ் மாஸ்டர் இளையராஜாவின் மீதுள்ள அக்கறையில் இவன் இப்படியே இருந்து விடுவானோ என்ற அச்சத்திலும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தான் லண்டன் டிரினிடி இசைக்கல்லூரியில் சேர்ந்து, கிளாஸ்ஸிக்கல் கிட்டார் கற்றுக் கொண்டிருந்த சமயத்தில் 8 வது கிரேடில் தேர்ச்சி பெற்று விட்டால் அவர் இசையில் பெரும் புலமை பெற்று விளங்குவார் என்று இளையராஜாவிடம் எப்படியாவது 8 வது கிரேடில் தேர்ச்சி பெற பணம் கட்டிவிட்டு தேர்வை எழுது என்று சொல்லியிருக்கிறார்.
பணத்தை கட்டியவர் அப்பொழுதும் கூட வகுப்பறைக்கு சரியாக போகாத காரணத்தால் அவரது மாஸ்டர் இளையராஜாவின் மீது மிகுந்த கோபத்தில் இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இனிமேல் உனக்கு நான் இசையும் கற்றுக் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
ஆனால் இளையராஜாவோ அவரது மாஸ்டரிடம் நான் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன் என்று சவால் விட்டு அவராகவே முயன்று கற்று தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். 84 மார்க் எடுத்தால் நல்ல மதிப்பெண் என்று இருந்த நிலையில் இளையராஜாவோ 85 மதிப்பெண்கள் பெற்று உயர்வான இடத்தை அடைந்தாராம். இதன் மூலம் இசை மீது இளையராஜாவிற்கு இருந்த அளவில்லாத ஆசை தெரிகிறது.
இதையும் படிங்க : சிவாஜிக்கு கொடுத்த வாக்குறுதி!.. நிறைவேற்றாமல் போன ஜெய்சங்கர்!..