ஏ.ஆர்.ரஹ்மானின் பாடகியை தன்னுடன் அழைத்த இளையராஜா… கடைசியில் அவர் கேரியரை அழித்த சோகம்..

by Akhilan |
ஏ.ஆர்.ரஹ்மானின் பாடகியை தன்னுடன் அழைத்த இளையராஜா… கடைசியில் அவர் கேரியரை அழித்த சோகம்..
X

AR Rahman: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மிகப்பெரிய ஹிட் பாடலை கொடுத்த பாடகியை தன்னுடன் அழைத்த இளையராஜா அவர் கேரியரையே அழித்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பாடகி அளித்த பேட்டியும் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

தமிழ் சினிமாவில் தனி ராஜாங்கமே படைத்து கொண்டு இருந்தார் இளையராஜா. அவர் பாடல் இருந்தாலே படம் ஹிட் என்ற நிலை இருந்தது. அந்த சமயத்தில் தான் ரோஜா படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை இயக்குனர் மணிரத்னம் அழைத்து வந்தார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டானது.

இதையும் படிங்க: விஜய் போட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! SK நினைச்சது வேறு.. அங்கு நடந்தது வேறு

அப்படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலை பாடியவர் பாடகி மின்மினி. இவர் மேடை பாடகி தான். ஆனால் அவரை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் இளையராஜா தான். இளையராஜா இசையில் உருவான மீரா படத்தில் லவ்வுனா லவ்வு மண்ணென்ன ஸ்டவ்வு பாடலை பாடினார். அது மின்மினிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதையடுத்து சில பாடல்களை பாடிய பின்னரே ரோஜா பட வாய்ப்பு வந்ததாம். மிகப்பெரிய ஹிட் பாடலை கொடுத்தும் அடுத்தடுத்து சினிமாவில் பாடாமலே இருந்தார். இந்நிலையில் தான் அவரின் கேரியர் அழிந்ததில் இளையராஜாவிற்கும் பங்கு இருப்பது தெரிய வந்து இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரை டிக் அடித்த அஜித்!.. எல்லாமே சிறுத்தை சிவா கையிலதான் இருக்கு!…

ரோஜா படத்தில் ஹிட் கொடுத்தவுடன் மின்மினியை அழைத்த இளையராஜா அவருக்கு இனி பாட போகாதே. என்னுடைய பாடல்களுக்கும் மட்டும் பாடும்படி கேட்டு இருக்கிறார். மினிமினி அதற்கு சம்மதம் தெரிவித்தாலும் அதற்கடுத்து இளையராஜாவால் அவருக்கு வாய்ப்பே வழங்கப்படவே இல்லையாம். இதையடுத்து அவர் கேரியரும் மொத்தமாக பறிபோனது.

இதை மினிமினி ஒரு பேட்டியில் ஓபனாக தெரிவித்து இருக்கிறார். அதே நேரத்தில் எதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்ட மினிமினி குரல்வளம் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்கு பின்னரே அது திரும்பியதாம். அதுவும் மினிமினி கேரியர் போனதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருந்தும் இளையராஜா குறித்து ஏகப்பட்ட நெகட்டிவ் விஷயங்களுக்கு இடையே இது அதிர்ச்சிகரமானதாகவே பார்க்கப்படுகிறது.

Next Story