தை பொறக்கும் நாளை... விடியும் நல்ல வேளை! பண்டிகைன்னாலே ராஜா ராஜாதான்!..

by sankaran v |   ( Updated:2024-01-14 09:46:59  )
Thalapathi
X

Thalapathi

தமிழ்த்திரை உலகில் பண்டிகைக் காலங்களுக்கு ஏற்ப துள்ளல் மிக்கப் பாடல்களைப் போட்டு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்துபவர் இசைஞானி இளையராஜாவுக்கு நிகர் அவர் தான்... என்னென்ன பாடல்கள் என்று பார்க்கலாமா...

பொங்கலுக்காக இளையராஜா போட்ட பாடல் இன்று வரை நம்மால் மறக்க முடியாது. பண்டிகைகள் காலம் என்றாலே அவரது இசையில் ஒரு துள்ளல் வந்து விடும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேருமே அந்த இசைக்கு அடிமை தான். அப்படி உருவான ஒரு பாடல் தான் மகாநதி படத்தில் வருகிறது.

தைப்பொங்கலும் வந்தது. பாலும் பொங்குது என்ற இந்தப் பாடல் தான் ஆண்டுதோறும் வரும் பொங்கல் நாளில் டிவி, ரேடியோ, செல் போன் என அனைத்து சாதனங்களிலும் ப்ரோமாவாகவும், ரிங் டோனாகவும் களைகட்டுகிறது.

Mahanadhi

Mahanadhi

பண்டிகைகளுக்கு ஏற்ப பாடல் கொடுப்பதில் இளையராஜா என்றுமே ராஜாதான். புது வருடம் பூத்தால் போதும். சகலகலாவல்லவன் படத்தில் இளமை இதோ இதோ என்று இளம் உள்ளங்களைத் துள்ளச் செய்து விடுவார். அதே போல போகிப்பண்டிகையான இன்றைய தினத்தில் அவரது சிறப்பு பாடல் ஒன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தளபதி படத்தில் வரும் மார்கழி தான் ஓடிப்போச்சு... போகியாச்சு ஹோய்... என்ற இந்தப் பாடல் செம மாஸ். அதே படத்தில் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாடலில் இடையே போகிப்பண்டிகையைக் கொண்டாடும் விதமாக ஒரு வரி வரும்.

போடா எல்லாம் விட்டுத் தள்ளு, பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு என்று அற்புதமாக இருக்கும். அதே போல தை பொறக்கும் நாளை... விடியும் நல்ல வேளை... பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்... அச்சுவெல்லம், பச்சரிசி, வெட்டி வச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் என பொங்கலை உற்சாகமாக வரவேற்கும் வகையில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். அதே போல தீபாவளி என்றால் நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி பாடல் தான் நம் நினைவுக்கு வரும்.

Next Story