நான் கமலை வச்சி எடுத்த படத்துக்கு இளையராஜா இசை!.. பல வருஷம் கழிச்சி ஷங்கர் பகிர்ந்த சீக்ரெட்!..
Ilaiyaraja: தமிழ் சினிமாவில் இசைத்துறையில் யாரும் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவானாக இருந்து வருபவர் இளையராஜா. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன் இசையால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்தவர்.
காலங்காலமாக கேட்டு மகிழக் கூடிய பல பாடல்களை கொடுத்துள்ள இளையராஜா நாட்டுப்புற பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், சோகப்பாடல்கள் என எல்லா உணர்வுகளுக்கும் ஏற்ற வகையில் விதவிதமான பாடல்களை ரசிகர்களுக்காக கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: மகனுக்காக களத்தில் இறங்கிய அண்ணாமலை…பேரம் பேசிய விஜயா..! சிறகடிக்க ஆசையில் சூப்பர் ட்விஸ்ட்..!
இந்த நிலையில் ஒரு பொதுமேடையில் இளையராஜா மற்றும் ஷங்கர் இருவரும் இருந்த போது நடிகை ரோகிணி ஷங்கரை பார்த்து ‘ நீங்கள் இருவரும் சேர்ந்து எப்பொழுது பணியாற்ற போகிறீர்கள்?’ என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.
இதை கேட்டதும் இளையராஜா ரோகினியை பார்த்து ‘ நிறுத்து. என்ன எனக்காக சான்ஸ் கேட்குறீயா? இது எனக்கு சுத்தமாக பிடிக்கல. அவருக்கு யாரு சரியாக இருப்பார்களோ அவருடன் பணியாற்றுவார். அதை தொந்தரவு செய்ய கூடாது’ என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பிரபலத்துக்கு ஆசையாக கொடுத்த பரிசு.. அவர் சொன்ன பதிலால் விழுந்து விழுந்து சிரித்த விவேக்.. சுவாரஸ்ய சம்பவம்..!
ஆனால் இது கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானை வைத்துதான் இளையராஜா சொல்லியிருக்கிறார் என்பதுதான் பலபேரின் கருத்தாக இருக்கிறது. இதை இளையராஜா சொன்னதும் அவரை குறுக்கீட்டு பேசிய ஷ்ங்கர் இளையராஜாவுடன் பணியாற்ற வேண்டும் என்பது பல இயக்குனரின் கனவாகவே இருக்கிறது.
அப்படித்தான் எனக்கும் இருந்தது. முதல் படத்திற்கே இளையராஜாதான் இசையமைத்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் எப்படி கேட்பது? என்ற தயக்கம்தான் இன்றுவரை அவருடன் சேர்ந்து பணியாற்ற முடியாமல் போனது.
இதையும் படிங்க: த்ரிஷாவை வரவச்சு இத செய்வேன்! லோகேஷும் விஜயும் கோபிச்சுக்கிட்டாலும் பரவாயில்ல – மன்சூர் அலிகான் பகீர் பேட்டி
ஆனால் நானும் இளையராஜாவும் சேர்ந்து ஒரே ஒரு படம் பண்ணியிருக்கோம். அது யாருக்கும் இதுவரை தெரியாது. அது ஒரு விளம்பர படம். அந்த விளம்பர படத்தில் கமல் நடித்திருப்பார். அதற்கு இசையமைத்தது இளையராஜாதான் என ஷங்கர் கூறினார்.