இளையராஜாவை பற்றி வாய்கிழிய பேசுபவர்களுக்கு சரியான நெத்தியடி! இது ஒன்னு போதுமே

ilaiyaraja
Ilaiyaraja:இளையராஜாவின் காப்பிரைட்ஸ் பிரச்சனை தான் இப்போது கோடம்பாக்கத்தில் கொழுந்து விட்டு எரிகின்றது. தனது பாடலை இசையை தன் அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக் கூடாது என இளையராஜா தொடர்ந்து புகார் கொடுத்து வருகிறார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சனை இப்போது குட் பேட் அக்லி திரைப்படம் வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு முன்பாகவே எஸ்பிபி தனது பாடலை தன் அனுமதி இன்றி வெளிநாடுகளில் பாடியதாக அவருக்கு எதிராகவே புகார் கொடுத்தார் இளையராஜா.
ஆனால் கங்கை அமரன் எஸ்பிபிக்கு ஆதரவாக பேச போய் அது இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு மேடை கச்சேரிகளில் தன் பாடலை பாடலாம் என இளையராஜா தரப்பிலிருந்து பதில் வந்தது. ஆனால் படங்களில் தன்னுடைய அனுமதியின்றி பாடல்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என இப்போது வரை கூறிக் கொண்டிருக்கிறார் இளையராஜா. இவருடைய இத்தகைய செயல் இளையராஜா ரசிகர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு இந்த ஒரு செயல் இளையராஜாவின் மீது கடும் கோபத்தையும் எரிச்சலையும் வரவழைத்து இருக்கிறது.
ஏனெனில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக தன்னுடைய இசையால் மக்கள் மனதை கவர்ந்தவர். அதனால் தன்னைப் பின் தொடர்பவர்கள் தன் பாடலை பயன்படுத்தினால் அது அவருக்கு தானே பெருமை. அப்படி இருக்கையில் பணத்திற்காக இப்படி கூட இளையராஜா செய்வாரா என்பது போல அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இளையராஜாவின் ரசிகர்கள் அவரை சார்ந்தவர்கள் பணத்திற்காக இளையராஜா இவ்வாறு செய்ய மாட்டார் அவரிடம் இல்லாத பணமா அவருக்கு உண்டான மரியாதையை அவர் எதிர்பார்க்கிறார் அவ்வளவுதான் என கூறி வருகிறார்கள் .
இருந்தாலும் பணத்திற்காக தான் இப்படி செய்கிறார் என சொல்பவர்களுக்கு தக்க பதிலடியாக ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. மறைந்த நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் 1985 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தை எடுத்தார். அந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவை இசையமைக்கும்படி கேட்டார் பிரதாப் போத்தன். இதுதான் அவர் இயக்கிய முதல் திரைப்படம் .ஆனால் இளையராஜா பணமே வாங்காமல் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்தாராம்.

எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என பிரதாப் போத்தன் கேட்டிருக்கிறார் .அதற்கு எனக்கு பணம் எதுவும் வேண்டாம். நான் இதை உனக்காக செய்கிறேன் என சம்பளமே வாங்காமல் இந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்தார் இளையராஜா. அது மட்டும் அல்ல இந்த படமும் அவருக்கு மிகவும் பிடித்த படம். படத்தில் அமைந்த பாடல்களும் அவருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்கள் என பிரதாப் போத்தன் ஒரு பழைய வீடியோவில் பேசியிருக்கிறார். இதை இப்போது வைரல் ஆக்கி இளையராஜாவுக்கு எதிராக யார் யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களுக்கு ஒரு தரமான பதிலடி என இளையராஜாவை சார்ந்தவர்கள் பரப்பி வருகிறார்கள்.