என் பொழப்புலயே கைய வைப்ப!.. நான் பண்ணனுமா??.. பாக்யராஜ் மீதிருந்த கோபத்தை பார்த்திபனிடம் காட்டிய இசைஞானி!..
தமிழ் சினிமாவின் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக திகழப்படுபவர் இசைஞானி இளையராஜா. இசையில் பெரும் புரட்சியை செய்து காட்டியவர் தான் நம் இசைஞானி. 70களில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர் கிட்டத்தட்ட 3 தலைமுறை நடிகர்களுக்கு தன் இசைப்பங்களிப்பை கொடுத்துவருகிறார்.
இன்றும் நம் நியாபகங்களை நினைவு கூறும் ஒரு ஆயுதமாக இவரின் இசையில் அமைந்த பாடல்களே உள்ளன. எல்லா வித சூழ்நிலைகளுக்கும் இவரின் பாடல்கள் ஒரு ஆறுதலாக இருந்து வருகின்றன. அப்படி பட்ட ஒரு இசை மேதைக்கு போட்டியாக களம் இறங்கியவர் தான் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ்.
பாக்யராஜ் நடிகர் மற்றும் இயக்குனராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். இவர் எப்பொழுது இசையமைக்க ஆரம்பித்தாரோ அப்பொழுதே இருந்தே இளையராஜாவுக்கு சின்ன மனவருத்தம் இருந்ததாம். அதுவும் அது ஒரு ஆரோக்கியமான மனவருத்தமே. போட்டி கிடையாதாம்.
பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்து ஒரு படத்தை இயக்கும் இயக்குனராக பார்த்திபன் மாறிய சமயம் அது. அப்பொழுது தான் பாக்யராஜும் இசையமைக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த நேரத்தில் எந்த இரு புது இயக்குனராக இருந்தாலும் அவர்களது பெரும்பாலான படங்களுக்கு இசையமைப்பது இளையராஜாதான். அதே மாதிரி பார்த்திபனும் இளையராஜாவை இசையமைக்க அணுக எண்ணி பாக்யராஜிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் பாக்யராஜ் ஏதோ தெரிந்தவர் போல சரி உன் விருப்பம் போய் கேட்டுப்பார் என்று கூறி அனுப்பியிருக்கிறார். பார்த்திபனும் அவரது உதவியாளர் ஒருவரும் இளையராஜாவை சந்தித்து தன் படத்திற்கு இசையமைக்க கேட்க இளையராஜாவே முடியவே முடியாது என சொல்லிவிட்டாராம். காரணம் பாக்யராஜ் இசையமைப்பாளராக ஆனது தானாம். இதை பார்த்திபனே கூறினார். மேலும் பாக்யராஜ் உதவியாளர்கள் எவருக்கும் இசையமைக்க முடியாது என்றும் கூறிவிட்டாராம்.
காலில் எல்லாம் விழுந்தும் அவர் ஒத்துக்கவே இல்லையாம். அதன் பிறகு பார்த்திபன் படத்திற்கு பாக்யராஜ் தான் இசையமைத்தாராம். ஆனால் இப்பொழுது வரை பார்த்திபன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.